டாக்கா

பாஜக இரு இடங்களுடன் இருந்து தற்போது ஆட்சியை பிடித்தது போல் எதிர்க்கட்சிகளும் ஆட்சியை பிடிக்கும் என வஙக தேச பிரதமர் ஷேக் ஹசினா கூறி உள்ளார்.

நடந்து முடிந்த வங்க தேச மக்களவை தேர்தலில் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி 288 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.   எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாதி கட்சி 7 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.   இது குறித்து அவாமி லீக் கட்சியின் தலைவியும் மீண்டும்  பிரதமராக உள்ளவருமான ஷேக் ஹசீனா செய்தியாளர்களிடம் தனது இல்லத்தில் உரை நிகழ்த்தினார்.

அப்போது ஷேக் ஹசினா, “இந்தியாவில் சென்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி த்தனி இடங்களை பெற்றது என நினைவுள்ளதா >  அத்தனை பெரிய கட்சி தோல்வி அடைந்ததற்கு காரணம் அவர்களால் பிரதமர் வேட்ப்பாளர் யார் என கூற முடியாதது தான்.   அதனால் மக்கள் காங்கிரஸ் போன்ற் மூத்த கட்சிக்கு வாக்களிக்கவில்லை.

ராஜிவ் காந்தி வென்ற போது பாஜக வெறும் இரு இடங்களில் மட்டுமே வென்றிருந்தது.   இப்போது ஆட்சியை பிடித்துள்ளது.   ஆகவே தற்போதைய நிலையை வைத்து எதுவும் சொல்ல முடியாது.   எந்தக் கட்சியும் முயன்றால் ஆட்சியை பிடிக்க முடியும்.” என கூறி உள்ளார்.