இந்திய ராணுவத்தினருக்கு இலகுரக மெஷின்கன்..!

Must read

புதுடெல்லி: அமெரிக்காவிலிருந்து 72,400 அசால்ட் ரைஃபிள் ரக துப்பாக்கிகளை வாங்குவதற்கு, ஃபாஸ்ட் டிராக் செயல்முறையில் ஆர்டர் போடப்பட்டுள்ள நிலையில், நமது தரைப்படையின் 16,000 வீரர்களுக்கு, இலகுரக மெஷின்கன் வழங்குவதற்கு முடிவுசெய்யப்பட்டுள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து கூறப்படுவதாவது; ஆயுதங்கள் வாங்குவதில் ஏற்படும் எதிர்பாராத தாமதம், விரும்பாத நிகழ்வுகள் ஆகிய காரணங்களினால், ஃபாஸ்ட் டிராக் செயல்முறை பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில், மேற்கண்ட தாமதங்கள், ராணுவத்தின் செயல்திறன் மற்றும் தயார்நிலையை பாதித்துவிடும்.

வரும் வாரங்களில், ‍அமெரிக்கா, பல்கேரியா மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு, இந்திய ராணுவக் குழுவினர் நேரடியாக சென்று, இலகுரக மெஷின்கன் கொள்முதல் செயல்பாட்டை முன்னெடுப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, இலகுரக மெஷின்கன் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள், சில காரணங்களால் ரத்துசெய்யப்பட்டு வந்தன. தற்போது அந்தப் பணிகள வேகம் பெற்றுள்ளன.

– மதுரை மாயாண்டி

More articles

Latest article