வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசினால் லைசென்சு ரத்து! போக்குவரத்துறை ஆணையர்

Must read

சென்னை:

ந்தியாவிலேயே சாலை விபத்துகள் அதிக அளவில் நடைபெறும் மாநிலங்களில் தமிழகமும் முன்னணியில் உள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் நடைபெற்றுள்ள சாலை விபத்துகளில் தமிழகம்தான் முதல் இடத்தை பிடித்துள்ளது. இது தமிழத்திற்கு தலைகுணிவை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சாலைவிபத்துக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது மதுபானம் என்பதும் உறு செய்யப்பட்டது. இதன் காரணமாக பாமக மற்றும் சமுக சேவை இயக்கங்கள் தொடர்ந்த வழக்கு காரணமாக நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் தற்போது அகற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், விபத்து மற்றும் உயிரிழப்பை தடுப்பது குறித்து உச்சநீதிமன்றத்தின் சாலை பாதுகாப்பு கமிட்டி அண்மையில் விவாதித்து, மாநிலங்களுக்கு  சாலை பாதுகாப்பு விதிகளை கடுமையாக கண்காணிக்கும்படி உத்தரவிட்டு உள்ளது.

அதில், போதையில் வாகனம் ஓட்டுபவர்கள், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுபவர்கள், அதிவேகமாக வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் அவர்களது லைசென்சும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து தமிழகத்திலும் போக்குவரத்து துறை ஆணையர் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

இந்த ஆண்டு இதுவரையில், அதிவேகமாக பயணம் செய்த 61 ஆயிரத்து 170 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுபோல  70 ஆயிரம் பேர் மீது போதையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆனால் எந்தவித கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழக போக்குவரத்து துறை ஆணையர் தயானந்த் கட்டாரியா அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

அதன்படி போதையில் வாகனம் ஓட்டினாலோ, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினாலோ அவர்கள் லைசென்சு தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.

 

More articles

Latest article