12ந்தேதி முதல் கோவை வேளாண் பல்கலையில் விண்ணப்பிக்கலாம்!

Must read

கோவை,

கோவையில் இயங்கிவரும் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் 12ந்தேதி விண்ணப்பிக்க தயாராக இருங்கள்.

கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் சேருவதற்கு, வரும் 12 ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலை வழங்கும் பல்வேறு இளநிலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ் இயங்கும் கல்லூரிகள் மற்றும் படிப்புகள்:

பி.எஸ்.சி., அக்ரிகல்ச்சர் (இளம் அறிவியல் வேளாண் பட்டப்படிப்பு) – வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோவை, மதுரை, கிள்ளிகுளம் மற்றும் திருச்சி.

பி.எஸ்.சி., ஹார்ட்டிகல்ச்சர் (தோட்டக்கலை) – தோட்டக்கலைக் கல்லூரி, பெரியகுளம்.

பி.எஸ்.சி., பாரஸ்ட்ரி (வனவியல்) – வனவியல் கல்லூரி மற்ற்உம் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம், கோவை.

பி.எஸ்.சி., ஹோம் சயின்ஸ் (மனையியல்) – மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை.

பி.டெக்., அக்ரிகல்ச்சர் இன்ஜினியரிங் (வேளாண் பொறியியல்) – வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குமுளூர்.

பி.டெக்., பயோடெக்னாலஜி, பயோஇன்பர்மேட்டிக்ஸ், அக்ரிகல்ச்சர் இன்பர்மேஷன் டெக்னாலஜி, பி.எஸ்., அக்ரிபிசினஸ் மேனேஜ்மென்ட் (உயிரி தொழில்நுட்பம், உயிரி தகவலியல், வேளாண் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வேளாண் தொழில் மேலாண்மை)- வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோவை.

பி.டெக்., ஹார்ட்டிகல்ச்சர் (தொழில்நுட்ப தோட்டக்கலை) தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோவை.

பி.டெக்., புட் பிராசஸ் இன்ஜினியரிங், எனர்ஜி மற்றும் என்விரான்மென்டல் இன்ஜினியரிங் (உணவு பதனிடுதல், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல்) – வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோவை.

4 ஆண்டுகள் / 8 செமஸ்டர்கள் கல்வித்திட்டத்தில் அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகம் மற்றும் கனடாவின் நோவா ஸ்காசியா வேளாண்மை கல்லூரி ஆகியவற்றுடனான டியூயல் டிகிரி திட்டமும் உண்டு.

பொதுத் தகுதி: இந்த படிப்புகளில் சேர பிளஸ் 2 தேர்வில் கணிதம், தாவரவியல், உயிரியல், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியியல், நுண்ணுயிரியல், உயிரி வேதியியல், மனையியல், செவிலியல், ஊட்டச்சத்து அறிவியல் ஆகியவற்றிள் ஏதேனும் ஒரு விருப்பப்பாடம் படித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பப் படிவங்களை முதல்வர், கோவை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

மதுரை, கிள்ளிக்குளம், திருச்சி, பெரியகுளம், மேட்டுப்பாளையம், குமுளூர் ஆகிய இடங்களிலும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள காரைக்கால் (புதுச்சேரி) மற்றும் கலவை (வேலூர்) வேளாண் கல்லூரிகளிலும், நகர்ப்புறத் தோட்டக்கலை வளர்ச்சி மையம், சென்னை ஆகிய முகவரிகளிலும் பெற்றுக்கொள்ளலாம்.

இதில் சேர விரும்பும்  மாணவர்கள் வரும் 12-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆன்லைனில், http://www.tnau.ac.in/admission.html என்ற இணையதளத்துக்கு சென்று ஜூன் 4 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

ஜூன் 12 இல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.

ஜூன் 16 ஆம் தேதி சிறப்பு கலந்தாய்வு நடைபெறுகிறது.

13 இளம் அறிவியல், இளம் தொழில்நுட்ப பட்டப் படிப்புகளில் 2,820 இடத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

More articles

Latest article