டெல்லி: மத்தியஅரசின் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் பொதுப்பங்கு (ஐபிஓவுக்கு) விற்பனைக்கு பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி அனுமதி அளித்துள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து வரும் மோடி அரசு, தற்போது எல்ஐசியையும் தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக  பொதுநிதி நிலை அறிக்கையின்போது நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், ஏர் இந்தியா நிறுவனத்தைப்போல எல்ஐசி பங்குகளும் தனியாருக்கு விற்பனை செய்யப்படும் என்று கூறியிருந்தார்.

அதைத்தொடர்ந்து, முதல்கட்டமாக பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சியில் மத்தியஅரசுக்கு சொந்தமான 5% பங்குகளை, விற்பனை செய்ய மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.  இதன்மூலம் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.65 ஆயிரம் கோடி வரை நிதி திரட்டி, நிதிப்பற்றாக்குறையைக் குறைக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

தொடர்ந்து, மத்திய அரசின் பங்குகளில் 5%  பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில், அதற்கான வரைவு திட்ட அறிக்கையை எல்ஐசி நிறுவனம் செபியிடம் கடந்த பிப்.மாதம் 12 ஆம் தேதி தாக்கல் செய்திருந்தது. இதற்கு செபி அனுதி அளித்துள்ளது.

இதன்மூலம் ,எல்ஐசி நிறுவனம் 31,62,49,885 பங்குகளை விற்பனை செய்ய உள்ளது. ஆனால், தற்போது ரஷ்யா உக்ரைன் போரால் பங்கு சந்தை கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், தற்போது எல்ஐசி பங்குகள் விற்பனை செய்ய முன்வந்தால், அது பேரிழிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்ஐசி-யில் கேட்பாறின்றி கிடக்கும் ரூ.21,500 கோடி எங்கு போகப்போகிறது தெரியுமா?

ஒரு சிறந்த அரசாங்கம் விற்பனைக் களத்தில் ஈடுபடுவதற்குப் பதிலாக நிறுவனங்களை உருவாக்க வேண்டும்! எல்ஐசி விற்பனை குறித்து முதல்வர் ஸ்டாலின்