டெல்லி: பொதுத்துறை நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் பாலிசி நிறுவனமான எல்ஐசியை தனியாருக்கு தாரை வார்க்க மோடி தலைமையிலான பாஜக அரசு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், அந்நிறுவனத்தில், பாலிசி முதிர்வடைந்து, கேட்பாறின்றி சுமார் ரூ.21,500 கோடி கிடக்கிறது. இதற்கு யாரும் உரிமை கோராத நிலையில், அந்த பணத்தை முதியோர் நலன் நிதிக்கு (Senior Citizens’ Welfare Fund (SCWF) மாற்ற மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.
மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்ற கடந்த 8 ஆண்டுகளில் ஏராளமான பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்துள்ளது. சமீபத்தில் ஏர் இந்தியா விமான நிறுவனம் டாடாவிடம் கைமாறிய நிலையில், நடப்பாண்டு பட்ஜெட்டில் லாபம் ஈட்டி வரும் எல்ஐசி நிறுவனத்தையும் விற்பனை செய்யப்போவதாக நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியிருந்தார். இது இந்திய மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளதுடன், எதிர்க்கட்சிகளும் மோடி அரசை கடுமையாக வறுத்தெடுத்து வருகின்றனர்.
முன்னதாக நீண்டகாலமாக நஷ்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்க முடிவு செய்துள்ளதாக, கடந்த பட்ஜெட்டுகளிலேயே நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியிருந்தார். அதன்படி, 2020-21 நிதியாண்டில் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்று 2.1 லட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் இலக்கை கொண்டிருப்பதாகவும், அதற்காக புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளததாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அதன்படி, The National Monetisation Pipeline என்ற பெயரில் புதிய திட்டத்தை உருவாக்கி அதன்மூலம் பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் தாரை வார்த்து வருகிறது மோடி அரசு.
ஏற்கனவே கடந்த 2018-19 நிதியாண்டில் 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அரசுப் பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்யவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதுபோல, 2019-20 நிதியாண்டில் 1.05 லட்சம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளை செய்தது. அதன்படி, ஐ.டி.பி.ஐ வங்கி, பி.பி.சி.எல்., இந்தியன் ஷிப்பிங் கார்ப்பரேஷன், கன்டெய்னர் கார்ப்பரேஷன், நீலாஞ்சல் இஸ்பத் நிகாம் லிமிடெட் உள்ளிட்ட பல நிறுவனங்களில் பங்குகளை விற்பனை செய்தது.
இதைடுத்து, காப்பீட்டு நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டை 49%-ல் இருந்து 74%-ஆக உயர்த்த யோசனை கூறியதுடன், நமது நாட்டின் பாலிசி நிறுவனமான எல்ஐசியை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாகவும் கூறினார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்வது, நாட்டின் அழிவுப்பாதைக்கு வழிவகுத்து விடும் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், அதை செவிமடுக்காத மோடி அரசு, தற்போது எல்ஐசி நிறுவனத்தை தாரை வார்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.
எல்ஐசி நிறுவனம் டிஆர்ஹெச்பி எனப்படும் பங்கு விற்பனைக்காக வரைவு அறிக்கையை பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபியிடம் தாக்கல் செய்துள்ளது. அதில், முதல்கட்டமாக, எல்ஐசி நிறுவனத்தில் மத்திய அரசுக்கு உள்ள 5% பங்குகளை ஐபிஓ மூலம் மார்ச் மாத இறுதிக்குள் விற்பனை செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செபியிடம் தாக்கல் செய்யப்பட்ட ரெட் ஹெர்ரிங் ப்ரோஸ்பெக்டஸ் வரைவுபடி, எல்ஐசியின் 31 கோடிக்கும் அதிகமான பங்குகளை அரசாங்கம் விற்கும். ஐபிஓவின் ஒரு பகுதி ஆங்கர் முதலீட்டாளர்களுக்காக ஒதுக்கப்படும். மேலும், எல்ஐசி ஐபிஓ வெளியீட்டில் 10 சதவீதம் வரை பாலிசிதாரர்களுக்கு ஒதுக்கப்படும்.
ஒவ்வொரு காப்பீட்டாளரும் ரூ. 1,000 அல்லது அதற்கு மேற்பட்ட எந்தவொரு கோரப்படாத தொகையைப் பற்றிய தகவலை அந்தந்த இணையதளங்களில் (10 ஆண்டுகள் முடிந்த பிறகும் தொடர) காட்ட வேண்டும் மற்றும் பாலிசிதாரர்கள் அல்லது பயனாளிகள் நிலுவையில் உள்ள கோரப்படாத தொகையைச் சரிபார்க்க இணையதளத்தில் வசதி வழங்கப்பட வேண்டும்.
மேலும், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (ஐஆர்டிஏஐ) கோரப்படாத தொகைகளின் சுற்றறிக்கையில், உரிமை கோரப்படாத தொகையை செலுத்தும் முறை, பாலிசிதாரர்களுக்கு தகவல் தொடர்பு, கணக்கு, முதலீட்டு வருவாயைப் பயன்படுத்துதல் போன்றவை தொடர்பான நடைமுறைகளை பரிந்துரைக்கிறது.
SCWF சட்டம், 10 ஆண்டுகளுக்கும் மேலாக வைத்திருக்கும் பாலிசிதாரர்களின் உரிமை கோரப்படாத தொகையை மூத்த குடிமக்கள் நல நிதிக்கு (SCWF) மாற்றுவதைக் கட்டாயப்படுத்துகிறது. தொகையை SCWF க்கு (Senior Citizens’ Welfare Fund (SCWF) மாற்றவும் மற்றும் SCWF இன் நிர்வாகம் தொடர்பான விதிகளை உள்ளடக்கியதாகவும் அது கூறியது.
மேலும், 2020ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் உரிமை கோராமல் கேட்பாரின்றி ரூ.16ஆயிரத்து 52 கோடியும் இருந்ததாகத் தெரிவித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் வரை எல்ஐசி நிறுவனத்தில் யாரும் உரிமை கோரப்படாமல் ரூ.18ஆயிரத்து 495 கோடியும், ஒவ்வொரு ஆண்டும் பாலிதாரர்களால் உரிமை கோரப்படாமல் கோடிக்கணக்கில் சேர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
அதாவது எல்ஐசியில் பாலிசி எடுத்து, அதை முறையாகக் கட்டாமல் இருப்பது, பாலிசி பிரீமியம் தொகையை செலுத்தாமல் அபாரதத்துடன் செலுத்த வேண்டும் என்பதால், செலுத்தாமல் இருப்பது, பாலிசிதொகை செலுத்தி அதை முடிக்கமுடியாமல் காலாவதியாக இருப்பது, சில பாலிசிதாரர்கள் தங்களது பாலிசி குறித்து உரியவர்களிடமோ, உரிமையாளர்களிடமோ தெரிவிக்காமலேயே இறந்துபோவது போன்ற போன்று பல்வேறு காரணங்கள்ல் முதிர்வுற்ற பாலி தொகை பல ஆண்டுகளாக கேட்பாறின்றி இருக்கிறது. இதை முதியோர் நலனுக்கு மாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாலிசி நிறுவனமும், தங்கள் நிறுவனத்தில் பாலிசிதாரர்களால் உரிமை கோரப்டாமல் இருந்தால் அதன் விவரங்களை தெரிவிப்பது அவசியமாகும். அதேபோல, பாலிசிதாரர்கள் தங்களின் பாலிசி குறித்தும் கேட்பாறின்றி இருக்கும் தொகையில் தங்களுடைய பெயர் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளவும் உரிமை உண்டு. ஆனால், பல நிறுவனங்கள் அதை சரிவர செய்ய முன்வராததால், கோடிக்கணக்கான ரூபாய் அனாமதயமாக கிடக்கிறது. இருந்தாலும், உரிமைக்கோரப்படாமல் உள்ள பணம் முதியோர் நலன் நிதிக்கு மாற்றப்படுவதாக கூறியிருப்பது சற்றே ஆறுதலை தருகிறது.
எல்ஐசி காப்பீடு பாலிசிகள் யூனியன் வங்கி கிளைகளில் விற்பனை! ஒப்பந்தம் கையெழுத்தானது….