சென்னை: தமிழகத்தில் இன்று முதல் நூலகங்கள் திறக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டள்ளது. அதைத்தொடர்ந்து பல பகுதிகளில் நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில், தமிழகத்தில் இன்று முதல் நூலகங்கள் திறக்க பொது இயக்குநகரகம் அனுமதி வழங்கியுள்ளது. நூலகததை நம்பியுள்ள ஏராளமானோர் வைத்த கோரிக்கைகளை ஏற்று 75 நாட்களுக்கு பிறகு நூலகங்கள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நூலகங்களில், வாசகர்கள் நூல்களை நேரடியாக எடுக்க அனுமதி இல்லை என்றும், நூலக பணியாளர்களே எடுத்து கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், 65 வயதிற்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள், 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இல்லை.
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுவோர்களை கருத்தில் கொண்டு நூலகங்கள் திறக்கப்படுகின்றன.
வாசகர்கள், பணியாளர்கள் கிருமிநாசினி பயன்படுத்துவதோடு முகக்கவசம் அணிவது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.