சிவகங்கை:
முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் குறித்து எஸ்.வி.சேகர் அவதூறாக பதிவிட்டதாக சிவகங்கை எஸ்பி-யிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பற்றி பாஜக பிரமுகரான நடிகர் எஸ்வி.சேகர் தனது டிவிட்டரில் தவறான தகவல்களை பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, நடிகர் எஸ்.வி. சேகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரோஹித் நாதன் ராஜகோபாலிடம், புகார் மனு அளித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel