கோவில்பட்டி: அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அதிமுகவில் இருந்து  நீக்குவோம் என்று சசிகலா ஆதரவு அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் இணைந்து நடத்திய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சட்டமன்ற தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து அதிமுகவில் சலசலப்பு எழுந்துள்ளது. தேர்தல் வரை அமைதியாக இருந்த சசிகலா, அதிமுகவை கைப்பற்றும் நோக்கில் அதிமுக நிர்வாகிகளிடம் பேசி, கட்சிக்குள்ளே சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக சமீபத்தில்,  சென்னையில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக்கூட்டத்தில்விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  தொடர்ந்து சசிகலாவுடன் தொடர்பல்  உள்ள அதிமுக நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். பல மாவட்டங்களில் சசிகலாவிற்கு எதிராகவும் அதிமுக சார்பில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிலையில்,  கோவில்பட்டியில் சசிகலா ஆதரவு அதிமுக நிர்வாகிகளான அதிமுக வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஆறுமுகப்பாண்டி யன் தலைமையில் மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் கௌசல்யா, அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ரூபம்.கே.வேலவன் மற்றும் அமமுக நிர்வாகிகள் சிலர் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி,

ல் சசிகலா மீண்டும் அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பு ஏற்க வேண்டும், சசிகலாவிடம் பேசியவர்களை நீக்கியதற்கு கண்டனம், இதே போன்று நிர்வாகிகளை நீக்கினால் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் தொண்டர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அதிமுகவில் இருந்து நீக்குவோம், என்று 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.