சென்னை: போரை மாய்ப்போம்! மனிதம் காப்போம்!  என உலக அகதிகள் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் எனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இன்று (ஜுன் 20ந்தேதி) உலக அகதிகள் தினம்  கடைபிடிக்கப்படுகிறது. உலக அகதிகள் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையால் உலகெங்கிலும் உள்ள அகதிகளை கௌரவிக்கும் ஒரு சர்வதேச தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில்  இன்று  உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கமான எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

பொல்லாத போர்களின் மோசமான விளைவே நாடற்ற மனிதர்கள்!

மனிதத்தைக் கொல்லும் போர்களால் வாழ்விழந்து ஏதிலிகளாய் புலம்பெயர்ந்தவர்களை அன்பால் அரவணைப்போம்!

நமது #DravidianModel-இல் “அகதிகள் முகாம்” என்பதை “மறுவாழ்வு முகாம்” எனப் பெயர் மாற்றி, அன்னைத் தமிழ் உறவுகளின் மாண்பைப் போற்றினோம்!

வாழ்வாதாரத்தையும் வாழ்வுரிமையையும் பாதுகாக்கிறோம்!

போரை மாய்ப்போம்! மனிதம் காப்போம்!

இவ்வாறு  கூறியுள்ளார்.