சென்னை: 
திராவிட இயக்க அறிவு கருவூலத்தின் நூற்றாண்டைக் கொள்கை பரப்பி கொண்டாடுவோம் என்று சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த நிதித்துறை வளாக கட்டிடத்தில் க.அன்பழகனின் மார்பளவு சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.  இதையடுத்து 1,20,000 சதுர அடியில் இயங்கி வரும் இந்த வளாகத்தில், கருவூல கணக்கு தொடர்பான அலுவலகங்கள், ஓய்வூதிய இயக்ககம் உள்ளிட்ட 15 அலுவலகங்கள் இயங்கி வரும் நந்தனம் ஒருங்கிணைந்த நிதித்துறை வளாக கட்டிடத்திற்கு ‘பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார்.
இந்த நிகழ்வில், உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.  இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,  இனமான பேராசிரியர் தாத்தா அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு நந்தனம் நிதித்துறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவச் சிலையை மாண்புமிகு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  அவர்கள் திறந்துவைத்த நிகழ்வில் கலந்துகொண்டேன். திராவிட இயக்க அறிவு கருவூலத்தின் நூற்றாண்டை கொள்கை பரப்பி கொண்டாடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.