பெங்களூரு:

பெரும்பான்மை எங்கே? நீங்கள் எவ்வளவு காலம் முதல்வராக இருக்க முடியும்? என்று நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, முதல்வர் எடியூரப்பபாவை கர்நாடக முன்னாள் முதல்வரும், சட்டமன்ற காங்கிரஸ்  கட்சித்தலைவருமான  சித்தராமையா கடுமையாகச் சாடினார்.

குமாரசாமி அரசை கவிழ்த்துவிட்டு,முதல்வராக பதவி ஏற்ற எடியூரப்பா இன்று சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தார். அவருக்கு, பாஜகவின் 105 வாக்குகளுடன், சுயேச்சை வாக்கு ஒன்றும் சேர்த்து 106 வாக்குகள்  பெற்று வெற்றி பெற்றார். இன்றைய நிலையித் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 207 ஆக இருந்த நிலையில், பெரும்பான்மை நிரூபிக்க 104 வாக்குகள் இருந்தாலே போதுமானது. ஆனால், பாஜகவிடம் 105 வாக்குகள் உள்ள நிலையில், சுயேச்சை ஒருவரும் அவர்களுக்கு ஆதரவாக வாக்களித்தார். ஆனால், காங்கிரஸ் கட்சி மற்றும் ஜேடிஎஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும், பாஜகவுக்கு ஆதரவாக வாக்குகள் அளிக்கவில்லை.

இந்த நிலையில்,  நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மீது பேசிய சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சித்தராமையா, பெரும்பான்மை எங்கே போனது என்று கேள்வி விடுத்தார்.

நம்பிக்கை தீர்மானத்தின்மீது, பேசிய எடியூரப்பா,   காங்கிரஸ்-ஜே.டி (எஸ்) ஆட்சியின் போது மாநிலத்தில் நிர்வாக இயந்திரங்கள் தோல்வி அடைந்து விட்டதாகவும்,  அதை மீண்டும்  சரியான பாதையில் கொண்டு வருவதே தனது  முன்னுரிமை என்று பேசினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய முன்னாள் முதல்வர் குமாரசாமி,  கர்நாடகாவில் அரசாங்கம் தெளிவாகவே நடைபெற்றது, “நான் 14 மாதங்கள் அரசாங்கத்தை திறமையாகவும், வெளிப்படை யாகவும், நடத்தினேன் என்றும்,  உங்கள் (பி.எஸ். யெடியுரப்பா) கேள்விகளுக்கு பதிலளிக்க எனக்கு எந்தக் கடமையும் இல்லை. எனது மனசாட்சிக்கு மட்டுமே நான் பதிலளிக்க வேண்டும்.  நான் என்ன வேலை செய்தேன் என்பது மக்களுக்குத் தெரியும், “என்று குமாரசாமி கூறினார். மேலும், ஜே.டி (எஸ்) கட்சி, தங்களை வீழ்த்த முயற்சிக்க மாட்டார்கள்.  சட்டசபையில் எண்களுக்காக போராட மாட்டோம்   மக்களின் நலனுக்காக போராடுவோம் என்றார்.

மேலும், நீங்கள் வறட்சியைப் பற்றி பேசுகிறீர்கள், குறைந்தபட்சம் இப்போது நீங்கள் எவ்வாறு செயல்படுவீர்கள் என்று பார்ப்போம். மக்களுக்காக நாங்கள் உங்களுடன் ஒத்துழைப்போம்” என்று குமாரசாமி கூறினார்.

இதைடுத்து பேசிய சித்தராமையா, முதல்வர் பதவியில் அமர்ந்துள்ள எடியூரப்பாவுக்கு வாழ்த்துக் கள் என்று கூறியர், மாநில முன்னேற்றத்தை மனதில் வைத்து செயல்படுவேன் என்று எடியூரப்பா பேசியதற்கு சித்தராமையா வரவேற்பு அளிப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், கடந்த வாரம் முதல் நான் அனைத்து முன்னேற்றங்களையும் பார்த்து வருகிறேன். சபாநாயகரின் முடிவு ஒரு வலுவான செய்தியை தெரிவித்துள்ளது என்றவர், இந்த விஷயத்தில், அவர் அவசரமாக செயல்படவில்லை. அவர் இந்த விஷயத்தை மிகவும் கவனமாக கவனித்து ஒவ்வொரு வழக்கையும் கவனித்தார், “என்று கூறியவர்,  அதிருப்தி  காங்கிரஸ்-ஜே.டி (எஸ்) எம்.எல்.ஏ.க்களை பாஜக தங்கள் தலைவிதிக்கு விட்டுவிட்டதாகவும் சாலைகளில் விட்டு விட்டீர்கள் என்று குற்றம் சாட்டினார்.

எடியூரப்பாக அமைத்துள்ள  அரசாங்கம்” அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டது மற்றும் ஒழுக்கக் கேடானது “என்று கூறியவர், இந்த அரசாங்கம் எவ்வளவு நாள் நீடிக்கும் என்றும்  சந்தேகங்களை யும் எழுப்பினார். உங்கள் அரசு மக்களுக்கான அரசு இல்லை என்று கடுமையாக விமர்சித்த சித்தராமையா, உங்களுக்கு ஆதரவாக எங்கே ஆணை உள்ளது… உங்களின்  பெரும்பான்மை எங்கே  என்று கேள்வி எழுப்பியவர்,  வெறும் 105 உறுப்பினர்களைக் கொண்டு எடியூரப்பா முதல்வராகி விட்டார் என்றும் சாடினார்.

“நீங்கள் எவ்வளவு காலம் (முதலமைச்சராக) இருப்பீர்கள் என்று பார்ப்போம்… என்று கூறிய சித்தராமையா,  நீங்கள் முழு காலத்திற்கு (முதல்வராக) இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஆனால் நீங்கள் அதை (காலத்தை) முடிக்க முடியும் என்று நான் நினைக்க வில்லை.

இவ்வாறு சித்தராமையா காட்டமாக பேசினார்.