சென்னை: மூக நீதிக் காவலர் வி.பி.சிங் புகழை நாளும் போற்றுவோம் என அவரது பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து பதிவிட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய நிலப்பரப்பில் மண்டிக்கிடந்த ஆதிக்க இருள் அகற்றிட, சமூகநீதி எனும் பேரொளியைத் தூக்கிச் சுமந்த விடிவெள்ளி ‘சமூகநீதிக் காவலர்’ வி.பி.சிங் அவர்களின் புகழை நாளும் போற்றுவோம்! ஆதிக்கத்துக்கு எதிரான போராட்ட வரலாற்றைத் திரிபுகளால் மாற்றுவது மீண்டும் அடிமைத்தனத்துக்கே வழியமைக்கும் முயற்சி என்பதை இளம் தலைமுறைக்கு எடுத்துச் சொல்வோம்! என்று கூறியுள்ளார்.

Let us remember and revere Thiru. #VPSingh, the sentinel of #SocialJustice, who dared to raise its radiant light against the entrenched darkness of caste tyranny across Indian soil. His legacy is our mandate. Remember this, young minds: to twist the history of resistance is to invite servitude once again.