சென்னை:

ன்னை அதிமுகவில் சேரப்போவதாக கூறி வரும்  மதுரை ஆதீனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிடிவி தினரகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வரும் நிலையில், டிடிவி தினகரன் விரைவில் அதிமுகவில் இணைவார் என்று சில நாட்களாக மதுரை ஆதினம் கூறி வருகிறார்.

நேற்று தனது 76வது பிறந்தநாள் நிகழ்ச்சியின்போதும்,: மக்களவைத் தேர்தலிலும், இடைத்தேர்தலி லும் பாஜக, அதிமுக கூட்டணி வெற்றிபெறும் என்றவர்,  தமிழகத்தில் அதிமுக தலைமையில் பலமான கூட்டணி அமைந்துள்ளது. தினகரன் அதிமுகவோடு இணைவார் என்று கூறினேன். அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்தார். அப்படியானால், அதிமுகவுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தினகரன் சொல்வாரா? என்று கேள்வி எழுப்பினார்.

தேர்தலின்போது வேண்டுமானால் சேராமல் இருக்கலாம். ஆனால் நிச்சயமாக ஒருநாள் அதிமுகவோடு அமமுக இணைவது உறுதி என்பதை ஆணித்தரமாகச் சொல்கிறேன்.  அவருடன் யார் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் எனச் சொல்ல முடியாது. அதிமுக வலுப்பெற வேண்டுமானால் அவர் இங்கு இணைந்து செயல்பட்டால்தான் நல்லது. அவருக்கும் அதுதான் நல்லது என்றார்.

இந்த நிலையில்,  அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் எம்எல்ஏ, ஆதீனத்தின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்,  ஆதீனத்தின் கருத்தை நான் ஏற்கெனவே நாகரீகமாக மறுத்திருந்தேன். அதிலிருந்தே அவர் உண்மை நிலையைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

ஆனால், அவர் தனது பழைய பணியான தமிழரசு பத்திரிகையின் மக்கள் தொடர்பு அலுவலர் வேலையை இன்னமும் மறக்கவில்லை. எங்களுக்கே தெரியாமல் இணைப்புப் பேச்சு நடப்பதாக அவர் தொடர்ந்து பொய் சொல்வதைப் பார்த்தால், யாருக்கோ ஏஜெண்டாக இருக்கிறார். யாருக்கோ உதவுவதற்காக இப்படி பொய் செய்திகளை தொடர்ந்து பரப்பினால், மதுரை ஆதீன மடத்தின் பெயரைக் காக்கவாவது, அருணகிரி ஆதீனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கூறி உள்ளார்.