சென்னை:

ரும் கல்வி ஆண்டில் மருத்துவக் கலந்தாய்வை ஆன்லைன் மூலம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளு க்கான கலந்தாய்வு நேற்று முதல் நடைபெற்று வருகிறது.

மொத்தமுள்ள 1,761 இடங்களில் 50 விழுக்காடு இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடாகும். மீதமுள்ள

912 இடங்களுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது.  வரும் 4ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

முதல் நாளில், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வுவும், அதைத் தொடர்ந்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

முதல் நாள் முடிவில் 488 பேருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ், கலந்தாய்வு நடைபெற்ற ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தை பார்வையிட்டார்.