நடராஜன் உறுப்பு மாற்று விவகாரம்: விதிமீறப்பட்டிருந்தால் நடவடிக்கை!:  ஜெயக்குமார் தகவல்

சென்னை:

சிகலா கணவர் நடராஜன்  உறுப்பு மாற்று சிகிச்சையில் விதி மீறப்பட்டிருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 

அமைச்சர் ஜெயக்குமார் சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

 

“டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை முடுக்கிவிடப்பட்டுள்ளது. காய்ச்சல் விவகாரத்தில் ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை.  அரசைக் கலைக்க வேண்டும், இந்த ஆட்சி நீடிக்கக்கூடாது என்ற நோக்கத்திலேயே ஸ்டாலின் இருக்கிறார்.

 

திமுக ஆட்சியில் தமிழகம் மர்ம தேசம் போன்று இருந்ததது.  அப்போது இருந்த காய்ச்சல் குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பியபோது ஒருவித மர்ம காய்ச்சல் என மூடி மறைத்தனர்” என்று ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து நடராஜன் உறுப்பு மாற்று விவகாரத்தில் விதிகள் மீறப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், “நடராஜன் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் விதிகள் மீறப்பட்டிருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப்படிதான் உறுப்பு தானங்கள் நடைபெற வேண்டும். சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்” என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

 
English Summary
legal-action-would-taken-if-rules-violated-the-natarajan-organ-transaction-case-minister-jayakumar-