சென்னை,

நிலவேம்பு குடிநீரை ஆய்வுசெய்ய  வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் ,இன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பின் போது விடுத்த ஊடக செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:

“டெங்குத் தடுப்புப் பணியை வெறும், நிலவேம்புக் குடிநீர் வழங்கும் பணியாக மட்டும் குறுக்கி விடக்கூடாது. இக்குடிநீர் உண்மையிலையே , தற்பொழுது டெங்குப் பரவலைத் தடுக்கிறதா என்பதை ஆராய வேண்டும்.

ஏனெனில் ஒரு மருந்தை எதிர்த்து நிற்கும் ஆற்றலை பாக்டிரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிரி கள் பெற்றுவிடுவது இயல்பான ஒன்றாகும்.

எனவே, ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில் இல்லாமல், வெறும் நம்பிக்கையின் அடிப்படை யில் தமிழக அரசு செயல்படுவது சரியல்ல.

நிலவேம்புக் குடிநீரை சர்வரோக நிவாரணியாக மாற்றி ,அதை வழங்குவதையே பெரிய கடைமை யாக பூதாகரமாக மாற்றி பிரச்சனையை திசை திருப்பக்கூடாது.

உரிய ஆய்வுகளை அது குறித்து மேற் கொள்ள வேண்டும்:” –  இவ்வாறு டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் குறிப்பிட்டுள்ளார்.