இலங்கைத் தமிழர்கள் கடல்கடந்து தமிழகத்தில் தஞ்சம்புகும் நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து 2011 இல் லீனா மணிமேகலை இயக்கத்தில் செங்கடல் திரைப்படம் வெளியானது.

செங்கடலுக்கு அடுத்து அவர் இயக்கிய படம், மாடத்தி. மாடத்தியை லீனா மணிமேகலை 2018 இல் எடுத்தார். பதினைந்துக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் மாடத்தி திரையிடப்பட்டது. 2019 இல் இதன் ட்ரெய்லரை நந்திதா தாஸ் வெளியிட்டார். ஜுன் 24 நீஸ்ட்ரீம் ஓடிடியில் மாடத்தி வெளியாவதை முன்னிட்டு முன்னாள் கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா டீச்சர் மாடத்தியின் ட்ரெய்லரை ட்விட்டரில் வெளியிட்டார்.

கருவாச்சி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் செம்மலர் அன்னம், அஜ்மினா கஸிம், அருள் குமார், ஸ்டெல்லா ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஜெஃப் டோலன், அபிநந்தன் ராமானுஜம், கார்த்தி முத்துகுமார் ஆகியோர் ஒளிப்பதிவு செய்ய, கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.

வண்ணார் சமூகத்துக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து மாடத்தியில் பேசியிருக்கிறார் லீனா மணிமேகலை.