டில்லி

பிரபல தொழிலதிபரும் ரிலையன்ஸ் குழும தலைவருமான முகேஷ் அம்பானி தனது குழுமத்தில் தலைமை மாற்றம் வரும் என சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

பிரபல தொழிலதிபரும் இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தருமான முகேஷ் அம்பானி தற்போது ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவராகப் பதவி வகித்து வருகிறார்.   சுமார் 64 வயதாகும் இவருக்கு இஷா, ஆகாஷ், ஆனந்த் என மூன்று மக்கள் உள்ளனர்.  இவர்கள் தற்போது ரிலையன்ஸ் குழும நிறுவனங்களில் முக்கிய பதவி வகித்து வருகின்றனர்.

இந்த குழுமத்தை நிறுவிய திருபாய் அம்பானியில் பிறந்த நாள் விழாவில் முகேஷ் அம்பானி, “தற்போது ரிலையன்ஸ் குழுமம் முக்கியமான தலைமை மாற்றத்தை ஏற்படுத்தும் செயல்பாட்டில் உள்ளது.  இளம் தலைமைக்கு நான் உட்பட அனைத்து மூத்த அதிகாரிகளும் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் நம்பிக்கையூட்டும் வகையில் ஒத்துழைக்க வேண்டும்.  வருங்கால தலைமுறையினருக்கு இணங்கும் வகையில் செயல்முறைகளைத் துரிதப்படுத்த வேண்டும்.

நாம் தான் அவர்களுக்கு வழிகாட்டி அவர்களை இயக்கி அவர்களை ஊக்குவித்து அவர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்.  நம்மை விட அவர்கள் ட சிறப்பாகச் செயல்படுவதைப் பார்த்துப் பாராட்ட வேண்டும்.  இனி வரும் ஆண்டுகளில் ரிலையன்ஸ் உலகின் வலிமையான மற்றும் புகழ் பெற்ற இந்தியப் பன்னாட்டு நிறுவனங்களில் ஒன்றாக மாறும். பெரிய கனவுகள் மற்றும் சாத்தியமற்றதாக தோற்றமளிக்கும் இலக்குகளை அடைவதே சரியான தலைமைக்குப் பெருமை. ஆகும்  ரிலையன்ஸ் அடுத்த தலைமுறையை நோக்கி ரிலையன்ஸ் பயணிக்கிறது.

அடுத்த தலைமுறை தலைவர்களாக ஆகாஷ், இஷா, ஆனந்த் ஆகியோர் ரிலையன்ஸ் நிறுவனத்தை இன்னும் உயரத்துக்கு கொண்டு செல்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. எனது தந்தையிடமும், என்னிடமும் இருந்த அதே தீப்பொறியையும், ஆற்றலையும் அவர்களிடம் காண்கிறேன். இந்த ரிலையன்ஸ் நிறுவனத்தை மேலும் வெற்றி பெறச் செய்வதற்கான அவர்களின் பணிக்கு அனைவரும் வாழ்த்துகளைத் தெரிவிப்போம்” என அறிவித்துள்ளார்.