சென்னை
நடிகர் டெ;ல்லி கணேஷ் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை மூத்த நடிகர் டெல்லி கணேஷ் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் மரணம டைந்தார். டெல்லி கணேஷ் மறைவுக்கு தலைவர்கல் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்ற்னர்.
முதல்வர் மு க ஸ்டாலின் :
“மூத்த திரைக்கலைஞர் ‘டெல்லி’ கணேஷ் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். நாடகத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்து, தன்னுடைய அடையாளத்தை அழுத்தமாகப் பதித்தவர் டெல்லி கணேஷ். 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவரது நகைச்சுவைக் காட்சிகள் இன்றளவும் மக்களால் மீண்டும் மீண்டும் பார்க்கப்படும் அளவுக்குச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவராக அவர் திகழ்ந்தார். வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் டெல்லி கணேஷ் பல தொடர்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் எழுத்தில் உருவான இளைஞன் திரைப்படத்திலும் டெல்லி கணேஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் திரைத்துறை வரலாற்றில் நீண்டகாலம் நிலைத்து நிற்கும் பல நகைச்சுவை, குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்தவரான அவரது மறைவு திரையுலகிற்குப் பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”
மத்திய அமைச்சர் எல் முருகன்
தமிழ்த் திரைப்படத் துறையின் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான டெல்லி கணேஷ், உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த மனவருத்தமளிக்கிறது. தனது சிறந்த நடிப்பிற்காக, ‘கலைமாமணி விருது’ மற்றும் சிறந்த நடிகருக்கான விருது போன்ற விருதுகளை வென்றவர், 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். தமிழ்ச் சினிமாவில் நடிக்கத் துவங்கும் முன்பு, இந்திய விமானப் படையிலும் பணியாற்றி நாட்டிற்கு சேவையாற்றியுள்ளார். இந்தச் சமயத்தில், அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலும், இரங்கலும் தெரிவித்துக் கொள்வதோடு, அண்ணாரது ஆன்மா சாந்தியடைய கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
தமது இயல்பான நடிப்புத் திறனால், ஏற்றுக் கொண்ட அனைத்துக் கதாபாத்திரங்களிலும், மிக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி, உலகெங்குமுள்ள தமிழ் மக்களின் அன்பைப் பெற்ற டெல்லி கணேஷ் அவர்கள், உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
டெல்லி கணேஷ் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன்.
எனத் தெரிவித்துள்னர்.
Actor Delhi Ganesh, Leaders,Condoled,
[youtube-feed feed=1]