சென்னை:
அவதூறுகளைப் பரப்பிய பாகிஸ்தான் டிவிட்டர் கணக்குகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடன் பயணித்தவர்கள் இறப்பு குறித்து அவதூறுகளைப் பரப்பியதாக இரண்டு பாகிஸ்தானிய ட்விட்டர் கணக்குகளின் மீது வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சி.பி.சி.ஐ.டி.யின் கிரைம் பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து வதந்திப் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
Patrikai.com official YouTube Channel