டில்லி:

ட்டக்கல்வியில் தங்கப்பதக்கம் பெற்ற வழக்கறிஞர் மாணவி, தலைமை நீதிபதியிடம் இருந்து அந்த பதக்கத்தை பெற  விரும்பாமல் நிகழ்ச்சியைப் புறக்கணித்து விட்டு  பணிக்கு சென்றுவிட்டார்.

தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் மீது  பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய நிலையில், அதன்மீதான விசாரணையில் அதிருப்தியை தெரிவிக்கும் வகையில், அவர் தலைமைநீதிபதி யிடம் இருந்து பதக்கத்தை வாங்க மறுத்ததாக தெரிவித்து உள்ளார்.

டில்லியில், நீதித் துறை நடைமுறைகளில் நிலுவைகளையும், தாமதங்களையும் குறைத்தல் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் தலைமை நீதிபதி உள்பட உச்சநீதி மன்ற நீதிபதிகள் பலர் கொண்டனர். நிகழ்ச்சியின்போது,   டில்லியின் தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் தனது எல்.எல்.எம் வகுப்பில் முதலிடம் பிடித்ததற்காக தங்கப் பதக்கம் பெற அவரது பெயர் அழைக்கப் பட்டது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வழங்குவார் என்றும் கூறப்பட்டது. ஆனால், பதக்கத்தைப் பெற ​​சுர்பி கார்வா வராமல் புறக்கணித்து விட்டு பணிக்கு சென்று விட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கூறிய சுர்பி கர்வா,  தலைமை நீதிபதி மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தை உச்சநீதிமன்றம் கையாண்ட விதம் சரியல்ல என்பதை வலியுறுத்தும் விதமாகவே, தான் தலைமைநீதிபதியிடம் இருந்து விருதைப் பெற விரும்பவில்லை என்றுகூறி உள்ளார்.

மேலும், “வகுப்பறையில் நான் கற்றுக்கொண்ட அனைத்தையும் வைத்து பார்க்கும்போது, தலைமை நீதிபதியிடம் இருந்து விருதை பெற வேண்டுமா என சில வாரங்களாக யோசித்து வந்ததாகவும், அவர் மீதான புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தன்னை குழப்பத்தில் ஆழ்த்திய தாகவும், அவர் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் எழுந்தபோது அவர் தலைமை தாங்கிய விதம் தனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் சுர்பி கார்வா  தெரிவித்து உள்ளார்.

மேலும்,  “அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாப்பதில் வக்கீல்கள் வகிக்க வேண்டிய பங்கு குறித்து தலைமை நீதிபத தனது உரையில் குறிப்பிட்டார். அதற்கான பதில்களை நானே தேடுகிறேன் என்றும் கவர்வா தெரிவித்தார்.

வழக்கறிஞர் சுர்பி கர்வா,முதுகலை பட்டத்திற்கான அரசியலமைப்பு சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவர் மற்றும் அவரது ஆய்வறிக்கை அரசியலமைப்பு சட்டமன்ற விவாதங்களின் பெண்ணியம் குறித்து அதிக அளவிலான  விமர்சனங்களை எழுப்பியது. ‘அரசியலமைப்பு ஒரு பெண்ணிய ஆவணமா?” என்ற தலைப்பில் ஆய்வறிக்கை சமர்ப்பித்தவர்.

மேலும் தான் அந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை என்றால், தனக்கு வழங்கப்பட்டுள்ள விருதை மறுக்க மாட்டேன் என்று கூறி உள்ளார்.

விழாவில் பேசிய தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய், சட்டக்கல்வியின் ஐந்தாண்டு பாடநெறி சமூக உணர்வுள்ள வழக்கறிஞர்களை வடிவமைக்கிறதா என்று கேட்க வேண்டிய நேரம் என்றும், நீதிமன்றங்களில் அநாகரீகமான நடத்தைக்கு ஊக்கமளித்தல் கூடாது என்றும் கூறினார்.

சுர்பி வர்மா பதக்கம் பெறாதது குறித்து கூறிய தேசிய சட்டப்பலைக்கழக பதிவாளர் பேராசிரியர் (டாக்டர்) ஜி எஸ் பாஜ்பாய் கூறும்போது,   “துரதிர்ஷ்டவசமாக, சுர்பி கர்வா  இங்கே இல்லை. நாங்கள் அவருக்கு பதக்கத்தை வழங்குவோம், ”என்று தெரிவித்தார்.