சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதை கண்டித்து மார்ச் 12-ஆம் தேதி மாநிலம் முழுவதும் த.வெ.க. ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில், சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான அரசாணையை வெளியிட கோரியும், அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறை களைத் திரும்பப் பெறவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் தமிழகம் எங்கும் பரவலாகி வரும் போதைப் பொருட்களையும் தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும் வருகிற மார்ச் 12-ஆம் தேதி த.வெ.க. சார்பில் தமிழ்நாடு முழுக்க அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து அக்கட்சி பொதுச் செயலாளர் என். ஆனந்த் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு – கழகத் தோழர்களுக்கு வணக்கம்.
விகிதாசாரப் பிரதிநிதித்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான (Caste-survey) அரசாணையை உடனடியாக வெளியிடக் கோருகிறோம்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் தமிழகம் எங்கும் பரவலாகி வரும் போதைப் பொருட்களையும் தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டிக்கிறோம்.
அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்ற பெயரில், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்கும் வகையிலும் நீர்த்துப் போகச் செய்யும் வகையிலும், அறவே ஜனநாயகமற்ற முறையிலான வழிகாட்டு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வலியுறுத்துகிறோம்.
இவற்றை வலியுறுத்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், வரும் 12ஆம் தேதி (12.03.2026) காலை 10 மணிக்கு, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக நிர்வாகிகளும் தோழர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு என்.ஆனந்த், பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலகம் (Party Headquarters Secretariat), தமிழக வெற்றிக் கழகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]