சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்றும், எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு குற்றம் சாட்டி வருகிறது என சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்,. வடசென்னையின் வளர்ச்சிக்காக ரூ.1000 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் பகுதியில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். திரு.வி.க. நகர் கன்னிகாபுரம் விளையாட்டு மைதான பணிகளை நேரில் பார்வையிட்டார். கணேசபுரம் மேம்பால பணி, 776 புதிய குடியிருப்பு கட்டுமானப் பணி, தண்டையார்பேட்டை பேருந்து நிலைய பணி பார்வையிட்டு வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், கன்னிகாபுரம் பகுதியில், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் ரூ.44.15 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் மற்றும் TNUHDB குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த ஆய்வின்போது, முதலமைச்சருடன் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர். கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
வடசென்னையின் வளர்ச்சிக்காக ரூ.1000 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சென்னை நகரின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை செய்துள்ளோம். ஓராண்டு காலத்தில் அனைத்து பணிகளையும் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு சென்னை நகரின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை சென்னைக்கு செய்து வருகிறோம் என்றவர். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மொத்தம் 252 பணிகள் நடைபெற்று வருகின்றன. வடசென்னை வளர்ந்த சென்னையாக ஓராண்டுக்குள் மாறும். ரூ.6,350 கோடியில் வடசென்னை வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மொத்தம் 252 பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.6,350 கோடியில் வடசென்னை வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. வடசென்னை வளர்ந்த சென்னையாக ஓராண்டுக்குள் மாறும் என்றார்.
பின்னர் செய்தியாளர்கள் ஆளுநரின் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மு.க.ஸ்டாலின், அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார், எல்லா பிரச்சனைகளிலும் அரசுக்கு எதிரான மனநிலையில் ஆளுநர் தொடர்ந்து அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். ஆளுநரின் செயல்பாடுகள் அரசுக்கு சிறப்புதான் சேர்க்கிறது, ஆளுநர் தொடர்ந்து அப்படியே செயல்பட்டு வரட்டும் என்றார்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறதே என்ற கேள்விக்கு, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது; எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன என்றார்.
பெரியார் விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் கூறிய முதலமைச்சர், பெரியாரை மரியாதை குறைவாக பேசுபவர்களுக்கு மரியாதை அளிக்க தயாராக இல்லை என்று தெரிவித்தார்.