டில்லி:

7 கட்டங்களாக நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 91 தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது.

இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் கடந்த மாதம் 10ந்தேதி இந்திய தேர்தல் ஆணையர்களால் அறிவிக்கப்பட்டது. அதன்படி  ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்ட தேர்தல் ஏப்ரல்  11ந்தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம்  நாடு முழுவதும் 20 மாநிலங்களில்  91 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது.

11-ந்தேதி தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் தொகுதிகள்:

ஆந்திரா – 25 தொகுதிகள்,

அருணாச்சல பிரதேசம் – 2 தொகுதிகள்,

பீகார் 4 தொகுதிகள்,

அசாம் – 5 தொகுதிகள்,

சத்திஸ்கர் -1 தொகுதி,

ஜம்மு காஷ்மீர் – 2 தொகுதிகள்,

மகாராஷ்டிரா 7 தொகுதிகள்,

மணிப்பூர் -1 தொகுதி,

மேகாலயா – 2 தொகுதி,

மிசோரம் – 1 தொகுதி,

நாகலாந்து – 1 தொகுதி,

ஒடிசா – 4 தொகுதிகள்,

சிக்கிம் – 1 தொகுதி,

தெலுங்கானா – 17 தொகுதிகள்,

திரிபுரா – 1 தொகுதி,

உ.பி. 8 தொகுதிகள்,

உத்தரகாண்ட் – 5 தொகுதிகள்,

மேற்கு வங்கம் – 2 தொகுதிகள்,

அந்தமான் – 1 தொகுதி,

லட்சத்தீவு – 1

(மொத்தம் 91 தொகுதிகள்)

இந்த தொகுதிகளில் இன்றுடன் பிரசாரம் முடிவடைகிறது. நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

தேர்தல் நடைபெற உள்ள 91 தொகுதிகளில் மொத்தம் 1280 வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளனர்.

தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ)  90  பேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு உள்ளார்கள் (ஆந்திராவில் ஒரு தொகுதியில் போட்டியில்லை)

பாஜக – 83, ஏஜிபி – 1, எல்ஜேபி-2, ஜேடியு – 1, சிவசேனா – 2, என்டிபிபி -1.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில்  ( United Progressive Alliance (UPA) 89 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.  (இதில் உ.பி. மாநிலத்தில் 3 தொகுதிகளில் போட்டியிடவில்லை) காங்கிரஸ் கட்சி 83 தொகுதிகள்,  எச்ஏஎம் (எஸ்)-2,. ஆஜேடி -1, ஆல்எல்எஸ்பி-1, என்சிபி-1, ஆதரவு சுயேச்சை -1

MGB in UP BSP-4 RLD-2 SP-2 Left front in Bengal RSP-1 AIFB-1 Jana Sena alliance in Andhra Jana Sena-17 BSP-3 CPI-2 CPI(M)-2

முதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ள  91 தொகுதிகளில் போட்டியிடும் 1280 வேட்பாளர்கள் மாநிலங்கள் வாரியாக விவரம்

அதுபோல எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள  மஹாகத்பந்தன்  (‘Mahagathbandhan (MGB)) கூட்டணி சார்பில் உ.பி.யிர்ல  போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்

பகுஜன் சமாஜ் கட்சி – 4, ராஷ்டிரிய லோக்தளம் – 2, சமாஜ்வாதி பார்ட்டி – 2,

இடதுசாரி முன்னணி மேற்கு வங்காளத்தில் ஆர்எஸ்பி -1, ஏஐஎஃபி -1, ஜனா

ஆந்திராவில் ஜனசேனா கூட்டணி சார்பில் ஜனசேனா 17 இடங்களிலும், பிஎஸ்பி-3, இந்திய கம்யூனிஸ்டு -2 , மார்க்சி யகம்யூனிஸ் -2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.