சென்னை

வம்பர் 10 ஆம் தேதி வரை தமிழக வாக்காளர்  பட்டியலில் திருத்தம் செய்யக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் வாக்காளர் பட்டியலில் பெயர் மற்றும் முகவரியைத் திருத்தப் பலரும் விண்ணப்பித்து வருகின்றனர்.   இதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.   ஆயினும் இந்த வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி முழுவதுமாக முடியவில்லை.

எனவே அதையொட்டி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இந்த காலக்கெடுவை அக்டோபர் 15 ஆம் தேதி வரை நீட்டித்தார்.  நேற்று மீண்டும் அவர் விடுத்த அறிவிப்பில் தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் மற்றும் முகவரி திருத்தம் செய்யக் காலக்கெடு வரும் நவம்பர் 18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி அன்று தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட உள்ளதாகவும் அந்த அறிவிப்பில் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.