வாஷிங்டன்
கடந்த 6 மாதங்களில் கிரிப்டோ கரன்சி மூலம் 1 பில்லியன் (100000 கோடி) டாலர் பரிவர்த்தனை நடந்துள்ளது.
தற்போது டிஜிட்டல் தளங்களில் நடைபெறும் பணமில்லா பரிவர்த்தனை மிகவும் சகஜமாகி உள்ளது. இதில் கிரிப்டோ கரன்சி எனது இந்த டிஜிடல் தளங்களில் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெற உதவும் பணமாகச் செயல்பட்டு வருகிறது. இதற்கு டாலர் கணக்கில் மதிப்பு அதிகரித்து வருகிறது.
உலகெங்கும் உள்ள நிறுவனங்களில் ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே முதலில் கிரிப்டோ கரன்சி பெற்று கொள்ளச் சம்மதித்து இருந்தனர். ஆனால் சிறிது சிறிதாக இந்த வழக்கம் அதிகரித்து தற்போது பல சர்வதேச நிறுவனங்கள் கிரிப்டோ நாணயம் பரிவர்த்தனையை ஏற்றுக் கொண்டுள்ளன. இந்த நாணய முறை பல நாடுகளில் புழக்கத்தில் உள்ளது.
ஒரு சில டெபிட் அட்டைகளிலும் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை இணைக்கப்பட்டுள்ளது. அவற்றில் விசா அட்டைகளும் ஒன்றாகும். விசா அட்டைகளில் இவ்வாறு கிரிப்டோ கரன்சி இணைக்கப்பட்ட அட்டைகள் மூலம் கடந்த 6 மாதங்களில் 1 பில்லியன் டாலர் அதாவது (100000 கோடி டாலர்கள்) பரிவத்தனை நடந்துள்ளது.
விசா அட்டைகளில் தற்போது 50 வகையான கிரிப்டோ கரன்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. எனவே வாடிக்கையாளர்களால் இந்த கிரிப்டோ கரன்சிகள் மூலம் செலவு செய்வதும் பண மாற்றல் செய்வதும் மிகவும் எளிதாகி உள்ளதாக விசா நிறுவனம் தெரிவித்துள்ளது.