நியூயார்க்
உலகப் புகழ்பெற்ற துப்பறியும் கதாபாத்திரமான ஜேம்ஸ் பாண்ட் 007 இனி பெண் கதாபாத்திரமாக மாற உள்ளது.

பல துப்பறியும் கற்பனை கதாபாத்திரங்கள் மக்கள் மனதை மிகவும் கவர்ந்துள்ளன. அதுபோல் பாத்திரம் உயிருடன் வாழ்வதாகவே பலரும் நினைத்து வருகின்றனர். அவ்வகையில் ஆங்கில திரைப்படங்களில் வரும் ஜேம்ஸ்பாண்ட் என்னும் கதாபாத்திரம் மிகவும் புகழ் பெற்றதாகும். இவருக்கு கொடுக்கப்பட்டுள்ள 007 என்னும் எண்ணுக்கு இன்றும் தனி புகழ் உண்டு.
தற்போது ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் புதிய படம் ஒன்று வர உள்ளது. இதில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் பெண்ணாக வர உள்ளது. இந்த வரிசையில் 25 ஆம் படமான இது குறித்து பல தகவல்கள் கசிந்துள்ளன. அதன்படி பிரிட்டனை சேர்ந்த கறுப்பின நடிகையான லஷனா லின்ச் புதிய ஜேம்ஸ்பாண்டாக உருவெடுக்கிறார். சுமார் 31 வயதான லஷனா லின்ச் 2011 ஆம் வருடம் ஃபாஸ்ட் கேர்ள்ஸ் என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார்.
இது குறித்து வந்த தகவலின் படி,”இந்த படத்தில் தற்போது ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடித்து வரும் டேனியல் கிரெய்க் பட தொடக்கத்தில் தாம் ஓய்வு பெற போவதாக கூறுகிறார். ஆனால் அவருக்கு ஒரு புதிய வில்லனை அழிக்க கோரிக்கை விடப்படுகிறது. அப்போது அவர் “007 உள்ளே வரவும்” என குரல் கொடுக்கும் போது லாஷனா லின்ச் உள்ளே நுழைகிறார். பாண்ட் என்றும் பாண்டாகவே இருப்பார். ஆனால் அவர் எண் இந்த பெண்ணுக்கு அளிக்கப்படும்” என தெரிய வந்துள்ளது.
[youtube-feed feed=1]