சிட்னி: ஆஸ்திரேலிய நாட்டில் தினக்கூலி வேலை பார்க்கும் தொழிலாளர்கள், உலகின் வேறு எந்த நாட்டினரையும்விட அதிக வாங்கும் சக்தி கொண்டவர்களாய் இருக்கிறார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் வழங்கப்படும் இந்த அதிகபட்ச தினக்கூலி உலகளவிலான போட்டியில் எதிர்மறை தாக்கத்தை உண்டாக்குகின்றன என்று அங்குள்ள வணிக நிறுவனங்கள் கூறுகின்றன. கடந்த 2018ம் ஆண்டு ஜுலை மாதம், தினக்கூலியில் அதிகரிக்கப்பட்ட 3.5% உயர்வின் மூலம், உலகிலேயே அதிகளவு தினக்கூலி வழங்கும் நாடாக ஆஸ்திரேலியா மாறியுள்ளது.

மேலும், இந்த 2019ம் ஆண்டின் நடப்பு ஜுலை மாதத்திலும் தினக்கூலியில் 3% உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், உலகளவில் அந்த நாடு முன்னிலை வகிக்கிறது.

கடந்த 2018ம் ஆண்டு ஒரு மணிநேரத்திற்கு 18.93 அமெரிக்க டாலராக இருந்த தினக்கூலி, இந்த 2019 ஜுலையில் 19.49 அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.