சென்னை:
மாதவரம்-சோழிங்கநல்லூர் மெட்ரோ நிலையங்களை லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் அமைக்க உள்ளது.
மாதவரம் முதல் – சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர், மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை 48 கிலோ மீட்டர் தூரத்திற்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த வழித்தடங்களில் 128 ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதில் கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி வழித்தடத்தில் 30 ரயில் நிலையங்களும் மாதவரம்- சோழிங்கநல்லூர் இடையே 48 ரயில் நிலையங்களும், மாதவரம்- சிறுசேரி சிப்காட் இடையே 50 ரயில் நிலையங்களும் அமைய உள்ளன. இந்தத் திட்டப் பணிகளை நிறைவேற்றக் கட்டுமான நிறுவனங்களுக்கு பணிகள் ஒதுக்கித் தரப்பட்டு உள்ளது. அந்தவகையில் ஒவ்வொரு பகுதிகளிலும் கட்டுமான நிறுவனத்தினர் உயர்மட்ட பாதைகளை அமைக்கும் பணிகளைத் தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில், 118.9 கிமீ சென்னை மெட்ரோ கட்டம் 2 திட்டத்தில்,  மாதவரம்-சோழிங்கநல்லூரை 48 ஸ்டேஷன்கள் வழியாக இணைக்கும் புதிய 47 கிமீ லைன் -5 இன், 2 உயர்ந்த ஒப்பந்தங்களை லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் குறைந்த விலைக்கு ஏலம் எடுத்துள்ளது.
இதையடுத்து, மாதவரம் சோழிங்கநல்லூர் மெட்ரோ ஸ்டேஷன்களை லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் அமைக்க உள்ளது.