தேனி: தமிழக கேரள எல்லை பகுதிகளான குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு பகுதிகளில் நிலச்சரிவு! போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. வாகனங்கள் சாலைகளிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால், பயணிகள் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து உள்ளனர்.

தமிழக – கேரள எல்லை பாதை வழித்தடங்களான  தேனியில் குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு ஆகிய 3 இடங்களில் தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை மற்றும் சூறாவளி காற்று காரணமாக,  மலைச்சாலைகளில்  ராட்சத பாறைகளுடன் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால்ப யணிகள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரிலிருந்து இடுக்கி மாவட்டத்தை இணைக்கும் கேரளா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள போடிமெட்டு மலைச்சாலையில் கடந்த வாரம் பெய்த கன மழை காரணமாக ஆங்காங்கே மண் சரிவுகள் ஏற்பட்டது. கேரளா செல்லும் வாகனங்களும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

சிறு சிறு மண் சரிவுகள் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் போடி மெட்டு சாலையில் உள்ள எட்டாவது கொண்டை ஊசி வளைவில் ராட்சச பாறைகள் சாலையில் ஒரு பகுதியில் விழுந்து அப்புறப்படுத்தப்படாத நிலையில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

அதுபோல, போடியிலிருந்து கேரளா செல்லும் 1 வது கொண்டை ஊசி வளைவு அருகில் ராட்சச பாறைகளுடன் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் பேருந்துகள் சாலையின் ஒரு பகுதியிலேயே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே  கடந்த வாரம் மலைச்சரிவு ஏற்பட்ட  போடி மெட்டு  பதினோராவது கொண்டை ஊசி வளைவில் இன்று காலை திடீர் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. பதினோராவது கொண்டை ஊசி வளைவு அருகிலேயே மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் சுற்றுலா பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.  தொடர்ச்சியாக மண்சரவுகளால்,  மரங்கள் பாறைகள் சரிந்து கொண்டே இருப்பதால் தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதேபோல தேனியிலிருந்து கேரளா செல்லும் மற்றொரு முக்கிய மலைவழிச்சாலையான கம்பத்திலிருந்து குமுளி செல்லும் முக்கிய வழிச்சாலை. இந்த சாலையில் இன்று அதிகாலை குமுளியிலிருந்து தமிழகம் வரும் மூன்றவது கிலோமீட்டர் தூரத்தில் மரம் சாய்ந்ததால் இரு மாநிலத்திற்கிடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தேனி மாவட்டத்திலிருந்து கேரளா செல்வதற்கு மூன்று முக்கிய வழிச்சாலையில் இரண்டு சாலைகளில் இயற்கை சீற்றத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் தமிழகத்திலிருந்து கேரளா செல்வோர்களும் , கேரளாவிலிருந்து தமிழகத்திற்குள் வரவிருந்தவர்களும் மிகுந்த சிரமத்திற்க்குள்ளானார்கள். இரு மலைவழிச் சாலையிலும் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு சீரமைக்கப்பட்டு போக்குவரத்து துவங்கப்பட்டது.

அந்த பகுதிகளை நெடுஞ்சாலை துறையினர் மண் சரிவினை கண்காணித்து போக்குவரத்து தடை ஏற்படாத வகையில் மண் சரிவுகளை அப்புறப்படுத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.