பெங்களூரு: நில முறைகேடு வழக்கு விசாரணை தொடர்பாக  கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஜூன் 17ம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா துணைமுதல்வராக பதவியில் இருந்தபோது, கடந்த 2006ம் ஆண்டு எலக்ட்ரானிக் சிட்டி ஒயிட்பீல்டு உள்ளிட்ட பகுதிகளில் அரசு நிலத்தை அரசாணையிலிருந்து விடுவித்ததாகவும், இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும்,  மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் வாசுதேவரெட்டி என்பவர் மனு தாக்கல் செய்தார். இதன் மீது விசாரணை நடைபெற்று வந்தது.

முன்னதாக இந்த வழக்கின் விசாரணையில் ஆஜராவதில் இருந்து விலக்கு வேண்டும் என அவர், தனது உடல்நிலையை சுட்டிக்காட்டி  தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு அனுமதி வழங்கியது. இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து,  நில முறைகேடு வழக்கில் ஜூன் 17ம் தேதி நேரில் ஆஜராக எடியூரப்பாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போத, 79 வயதாகும் எடியூரப்பா நுரையீரல் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை வருகிற 17-ஆம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.