பீஜிங்:

த்தம் உறையும் பிரச்சினைக்காக மருத்துவமனனயில் அனுமதிக்கப்படும் வயதானவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாக்கி உயிரிழக்கும் ஆபத்து உள்ளதாக லான்செட் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

புதிய ஆய்வின் படி, சீனாவின் வுஹானில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில், 191 நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ள வயதானவர்களின் நிலை குறித்து முதல்முறையாக ஆய்வு நடத்தப்பட்டது.

சராசரியாக, நடுத்தர வயது கொண்டவர்களில், பெரும்பாலும் ஆண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வில் 191 நோயாளிகளில், 137 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி விட்டனர். மீதமுள்ள 54 பேர் மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளனர்.

உயிர்பிழைத்தவர்களுடன் ஒப்பிடும் போது, உயிரிழந்தவர்கள் வயதானவர்களாவே இருப்பதற்கான வாய்புகள் அதிகமாக இருப்பது தெளிவாக தெரிகிறது.

கூடுதலாக, புதிய தகவலாக வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் சராசரி ஆயுட்காலம், 20 நாட்கள் என்றும், உயிர் பிழைக்காத 54 பேரில் இறக்கும் வரை வைரஸ் பாதிப்பு அவர்களுக்கு இருந்தது கண்டறியப்பட்டதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோயாளிகள் இன்னும் கொரோனா வைரசை பரப்பும் திறன் கொண்டவர்கள் என்றும் நீண்டகால வைரஸ் பாதிப்பு குறித்து தெரிவிக்கையில், வைரஸ் பாதிப்பு நோய் தீவிரத்தினால் பாதிக்கப்படுகிறது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இதுகுறித்து பேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இணை முன்னணி எழுத்தாளர் பேராசிரியர் பின் காவ் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அழிப்பது மிகவும் அவசியம் என்றும், இதன் மூலம் நோயின் தாக்கத்தை குறைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், கொரோனா வைரஸ் பாதிப்பால் உண்டாகும் பாதிப்பு குறித்தும், அதனால் நோயாளிகள் தனிமைப்படுத்தி சிகிச்சைக்கு உள்ளாக்குவது குறித்து நாங்கள் குழப்பமடையவில்லை ஏனென்றால், கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாதவர்களுக்கு இந்த வழிகாட்டுதல் மிகவும் உதவும் என்றும் நம்புகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஜின்யின்டன் மருத்துவமனையைச் சேர்ந்த இணை எழுத்தாளர் டாக்டர் ஷிபோ லியு தெரிவிக்கையில், சீனாவில் வயதானவர்கள் அதிகளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்களது உயிரிழபுக்கு முறையான வென்டிலேசன் பயன்படுத்தப்படாமல் இருப்பதே முக்கிய காரணமாக இருந்துள்ளது.

வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதாலும், வைரஸ் பரவுவது அதிவேகமாக நடக்கிறது. இதனால் இந்த வைரஸ் அவர்களது உடலில் நீண்ட கால பாதிப்புகளை உண்டாக்குகிறது. அத்துடன் அவர்களது இதயம், மூளை மற்றும் மற்ற உறுப்புகளுக்கு பாதிப்பை உண்டாக்குகிறது.

இந்த ஆய்வும், முதல் முறையாக கொரோனா வைரஸ் குறித்த முழுமையான விளக்கத்தை வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வர்கள் சராசரியாக 12 நாட்ககளில் வீடு திரும்பினர். ஆனாலும், இவர்களுக்கு நீண்ட நாட்கள் இருமல் நீடித்திருக்கும். வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றவர்களில் 45 சதவிகிதம் பேருக்கும் சிகிச்சைக்கு பின்னரும் இருமல் இருந்து வருகிறது.

இவர்களுக்கு இருக்கும் மூச்சு திணறல் சுமார் 13 நாட்களில் சரியாகி விடும். இதுவே சிகிச்சை பலனளிக்காமல் உயிரிந்தவர்களுக்கு அவர்கள் இறக்கும் வரை மூச்சு திறனல் இருந்ததும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வில் கூடுதலாககடுமையான சுவாசக் குழாய் நோய்க்குறி (ARDS), இதயத்தில் பாதிப்பு, கடுமையான சிறுநீரக பாதிப்பு மற்றும் இரண்டாம் நிலை தொற்று போன்ற பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதையும் விளக்குகிறது.

நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்பு கொரோனா பாதிப்பு சரியாகி விட்டதா? என்பது குறித்த சோதனைகள் தேவை என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம். கடுமையான இன்ஃப்ளூயன்ஸாவில், தாமதமான வைரஸ் சிகிச்சை எடுத்து கொள்வது தவறான ஒன்றாகும். மேலும் இந்த காரணிகளும் சேர்ந்து பாதிக்கப்பட்ட நோயாளிகள் உயிரிழக்கும் அபாயத்தை உண்டாக்குவதாகவும் பின் காவ் கூறியுள்ளார்.