பதவி விலகிய லலித்மோடி

நாக்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவியிலிருந்து லலித் மோடி ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம்,  ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்துடனான அவரது தொடர்பு முடிவுக்கு வந்தது.

ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தில் லலித் மோடி உறுப்பினராக இருப்பதால் அம்மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு பிசிசிஐ தடைவிதித்திருந்தது. இதனிடையே தனிநபருக்காக ஒரு கிரிக்கெட் சங்கம் பாதிக்கப்படுவதை தாம் விரும்பவில்லை என்றும் அதனால் பதவி விலகுவதாகவும் லலித் மோடி தெரிவித்துள்ளார்.

லலித் மோடி,ஐபிஎல் அமைப்பின் தலைவராக இருந்த காலகட்டத்தில், நிதிமுறைகேடு செய்ததாக  குற்றச்சாட்டு இருக்கிறது.  இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. இதிலிருந்து தப்பும் நோக்கத்துடன் இந்தியாவை விட்டு வெளியேறிய லலித் மோடி, தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார்.

 

 
English Summary
lalit-modi-resigned.