“ எங்க அப்பாவை கொன்னுட்டார் லட்சுமி ராமகிருஷ்ணன்!: கதறும் பிள்ளைகள்

Must read

சர்ச்சைக்குரிய லட்சுமி ராமகிருஷ்ணனின் சொல்லுவதெல்லாம் உண்மை டிவி நிகழ்ச்சி காரணமாக ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
5
ஸீ தமிழ் தனியார் தொலைக்காட்சியில், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கும் “சொல்லுவதெல்லாம் உண்மை” என்ற நிகழ்ச்சி  தினமும் ஒளிபரப்பாகிறது.  குடும்பப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட இரு தரப்பினரை எதிரெதிரே  உட்காரவைத்து லட்சுமி ராமகிருஷ்ணன் பஞ்சாயத்து செய்வார்.
“இதன் மூலம் பிரச்சினை தீர்ந்ததைவிட பெரிதானதே அதிகம். அப்பாவி ஏழை மக்களை பயன்படுத்தி தங்களது நிகழ்ச்சியை பிரபலப்படுத்துகிறார்கள்” என்றெல்லாம் இந்நிகழ்ச்சி மீதும், லட்சமி ராமகிருஷ்ணன் மீதும் புகார்கள் ஏற்கெனவே உண்டு.
இந்த நிலையில் சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த நாகப்பன் (60) என்பவர்  இந்த நிகழ்ச்சியால்   தற்கொலை செய்துகொண்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாகப்பன்
நாகப்பன்

இது குறித்து நாகப்பன் குடும்பத்தினர் தெரிவிப்பதாவது:
“நாகப்பன் இரண்டு லாரிகள் சொந்தமாக  இயக்கிவந்தார்.   மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது மைத்துனியுடன்  வாழ்ந்துள்ளார்.
இந்நிலையில்  சொத்து பிரச்சனை காரணமாக அவரது மைத்துனி  சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நாடியிருக்கிறார். இந்த கழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட நாகப்பனை ஒளிபரப்ப மாட்டோம் என்று உறுதி கொடுத்து நிகழ்ச்சியாளர்கள் பேச வைத்திருக்கிறார்கள்.
ஆனால் நிகழ்ச்சியில், தந்தை நிலையில் இருக்கும் நாகப்பன் தனது மகள்களிடம் தவறாக நடக்க முயன்றார் என்று  ஒளிபரப்பானது. இதனால் மனமுடைந்த நாகப்பன் தற்கொலை செய்து கொண்டார்” என்று நாகப்பன் குடும்பத்தினர் தெரிவிக்கிறார்கள்.
நாகப்பன்.. சடலமாக
நாகப்பன்.. சடலமாக

நாகப்பன் மகள் ஆதி, மகன் மணிகண்டன் ஆகியோர், “எங்கள் தந்தை தற்கொலை செய்துகொண்டதற்குக் காரணம் லட்சுமி ராமகிருஷ்ணனும், சொல்லுவதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தயாரிப்பாளர்களும்தான். நிகழ்ச்சி தொகுப்பாளரே நீதிபதி போல் தீர்ப்பு கூறியதால் மனமுடைந்து எங்களது தந்தை தற்கொலை செய்துகொண்டார்.  எங்க அப்பாவைக் கொன்றது லட்சுமி ராமகிருஷ்ணன்தான் ” என்று கதறியபடியே தெரிவித்தனர்.
ஏற்கெனவே இந்நிகழ்ச்சி குறித்து சிலர் தொடுத்த வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
 

More articles

1 COMMENT

Latest article