மீண்டுமா……..!!! தொண்டரை சரமாரியாக தாக்கிய கேப்புட்டன்!

Must read

சென்னை:
டந்த சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அடக்கி வாசித்துவந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது பிறந்தநாளான இன்று வழக்கமான எகிறலை வெளிப்படுத்தினார்.  புகைப்படம் எடுக்க முயன்ற தனது கட்சி தொண்டர் ஒருவரை சரமாரியாக தாக்கினார்.
விஜயகாந்த். பிறந்த நாளையொட்டி மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் ஒருசேர சென்று  வாழ்த்து தெரிவித்தனர்.  பிறகு  கேக் வெட்டி மாறி மாறி ஒருவருக்கு ஒருவர் ஊட்டி மகிழ்ந்தனர். இந்த நிலையில் தமக்கு பிறந்த நாளையொட்டி பரிசு கொடுக்க வந்த தொண்டர் ஒருவரை விஜயகாந்த் சரமாரியாக தாக்கியதாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0
அந்த வீடியோவில் தொண்டர் ஒருவர் நினைவுப் பரிசை வழங்கி போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்… போஸ் கொடுத்த கையோடு விஜயகாந்தை திரும்பிப் பார்க்க.. விஜயகாந்தோ அவரை சரமாரியாகத் தாக்ககுகிறார்…. அந்த தொண்டர் பயந்துபோய், தப்பி ஓடுகிறார்.
தொண்டரை விஜயகாந்த் திடீரென ஏன் அடித்தார் என்பதற்கான காரணம் தெரியவில்லை. இதற்கு முன்னர் வேட்பாளரை அடித்தது, கட்சி எம்.எல்.ஏ.வை அடித்தது, பத்திரிகையாளரைத் தாக்கியது, காறி உமிழ்ந்தது என பல பராக்கிரமங்களை செய்தவர் விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ லிங்க்: ( நன்றி நியூஸ் 7 )

 

More articles

1 COMMENT

Latest article