லக்னோ: விவசாயிகள் மீதான  பாஜகவினரின் வன்முறையைத் தொடர்ந்து உ.பி. மாநிலத்தில் லகிம்பூர் கேரி, சிதாபூர் உள்பட சில பகுதிகளில் இணைய தள சேவையை முடக்கி மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில், லகிம்பூர் கேரி பகுதியில் நடைபெற்ற விழாவுக்கு செல்ல இருந்த மாநில துணை முதல்-மந்திரி கேசவ் மவுரியா, மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி அஜய் மிஸ்ரா ஆகியோருக்கு எதிராக, விவசாயிகள்  கருப்புக்கொடி போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது, மத்தியமைச்சர் அஜய்மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா வந்த எஸ்யுவி கார்,  விவசாயிகள் மீது மோதிவிட்டு சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் இறந்தனர். இதையடுத்து இரு தரப்பினருக்கு இடையே வன்முறை மூண்டது. இதில் 4 விவசாயிகள் 4 பாஜகவினர், பத்திரிகையாளர் ஒருவர் என மொத்தம் 9 பேர் பலியாகினர்.

விவசாயிகள் மீது காரை மோதியவர், மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் என கூறப்படுகிறது. வன்முறையைத் தொடர்ந்து. லகிம்பூர் கெரி பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுஉள்ளனர். லக்னோவிலும் நேற்று இரவு முதல் 144 போடப்பட்டு உள்ளது. வன்முறையில் பலியானவர்களின் குடும்பத்தினரை  நேரில் சந்தித்து ஆறுதல் கூறச்சென்ற பிரியங்கா காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, சிதாபூர் பகுதியில் உள்ள விருந்தினர் இல்லத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  அவர்மீது அமைதிக்கு குத்தகம் விளைவிப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ராகுல்காந்தி, இன்று லகிம்பூர் கேரி மாவட்டம்  வந்து விவசாயிகளை சந்திக்க இருப்பதாகவும், சகோதரி பிரியங்காவையும் சந்திக்க எண்ணினார். அவர்  லகிம்பூர் கேரி வர மாநில அரசு அனுமதி அரசு அனுமதி மறுத்துள்ளது.

இந்த நிலையில், லகிம்பூர் கேரி மற்றும் சிதாபூர் பகுதிகளில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இணைய சேவை முடக்கம் குறித்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய சேவை முடக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.