Balan tholar அவர்களின் முகநூல் பதிவு:
1
“தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு லைக்கா முதலாளி சுபாஸ்கரன் ஒரு கோடி ரூபா பணம் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
நடிகர் சங்கம் நிதி சேகரிப்பிற்காக கிரிகட் போட்டி நடத்தியது. ஆனால் தமிழக மக்கள் அதற்கு ஆதரவு வழங்கவில்லை.
நாட்டில், ஆசிரியர் சங்கம் , ரயில்வே ஊழியர் சங்கம், அஞசல் ஊழியர் சங்கம் என பல சங்கங்கள் உண்டு. ஆனால் எந்த சங்கமும் தமக்கு கட்டிடம் கட்டுவதற்காக மக்களிடம் பணம் கேட்பதில்லை.
கோடிக் கணக்கான சம்பளம் வாங்கும் நடிகர்கள் தமது சங்க கட்டிடத்திற்காக ஏன் மக்களிடம் பணம் கேட்க வேண்டும்?
தமது சொந்தப் பணத்தில் அல்லது கறுபபு;பணத்தில் இருந்து சிறு பகுதியைக் கொடுத்தாலே கட்டிடம் கட்டி முடிக்கலாமே!
இந்நிலையில் தமிழக முதலாளிகளே பணம் கொடுக்காத நிலையில் லைக்கா முதலாளி எதற்காக ஒரு கோடி ரூபாவை வழங்க வேண்டும்?
லைக்கா முதலாளி இந்த ஒரு கோடி ரூபாவை தமிழ்நாட்டில் உள்ள அகதிகளுக்கு கொடுத்திருக்கலாமே?
அண்மையில் ஈழ அகதி ஒருவர் பொலிசாரினால் சித்திரவதை செய்து கால் முறிக்கப்பட்ட நிலையில் வாழ வழியின்றி குடும்பமாக தற்கொலை செய்ய தீர்மானித்தவேளை திலீபன் மகேந்திரன் என்பவர் தனது நண்பர்களிடம் 83 அயிரம் ரூபா சேர்த்து அவர்களுக்கு வழங்கி காப்பாற்றியிருக்கிறார்.
மதுரையில் 7 பிள்ளைகளின் தந்தையான ஈழ அகதி ஒருவர் வருவாய்துறை அதிகாரியின் தொல்லை பொறுக்காமல் தற்கொலை செய்தார். அவருடைய குடும்பம் இன்று எந்த உதவியும் இல்லாமல் மிகவும் கஸ்டப்படுகிறது.
தமிழகத்தில் பல அகதி முகாம்களில் கழிப்பறை வசதி இல்லை. குடிநீர் வசதி இல்லை. இந்த ஒரு கோடி ருபாவில் அவற்றை செய்து கொடுத்திருக்கலாமே?
“லைக்கா” முதலாளி சுபாஸ்கரனும் அகதியாக வாழ்ந்தவர்தானே. அவருக்கு அகதிகளின் கஸ்டம் தெரியாதா? அல்லது அகதிகளுக்கு உதவ வேண்டும் என்பது தெரியாதா?
தமிழகத்தில் ஈழ அகதிகள் கஸ்டப்படும்போது அவர்களுக்கு உதவாமல் நடிகர் சங்கத்திற்கு அன்பளிப்பு செய்வது பெருமை அல்ல. அசிங்கம்.
அதேபோல் ஈழ அகதிகள் கஸ்டப்படும்போது ஈழத் தமிழரிடம் பணம் அன்பளிப்பு பெறுவது நடிகர்களுக்கு குறிப்பாக கமலுக்கு அழகு அல்ல. அருவருப்பாக இருக்கிறது.
சீ.. தூ!”