கொல்கத்தா

கொல்கத்தாவில் பலாத்காரக் கொலை செய்யபட்ட பெண் மருத்துவரின் தந்தை நேற்று செய்தியாளர்களை  சந்தித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்டு 9 ஆம் தேதி அதிகாலையில் கொல்கத்தாவில் உள்ள அரசு ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த முதுநிலை பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதையொட்டி சஞ்சய் ராய் என்பவர் அடுத்த நாள் (10-ந்தேதி) கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி கொல்கத்தா உயர்நீதிமன்றம்\ உத்தரவிட்ட\தன்படி சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து 14-ந்தேதி முதல் விசாரணையை தொடங்கினர். இந்த விவகாரத்தில், தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றமும், மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பரிந்துரைகளை வழங்க சிறப்புக்குழு ஒன்றை நியமித்தது.

கடந்த 18 ஆம் தேதி இந்த வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு .நேற்று, நீதிபதி அனிர்பன் தாஸ் வழங்கிய தீர்ப்பில், பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சஞ்சய் ராய்க்கு சாகும்வரை சிறையில் அடைக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதிப்பதாகவும், ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்., பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூ.17 லட்சம் வழங்கவேண்டும் என மேற்கு வங்காள வங்காள அரசுக்கு உத்தரவிட்டார்.

பெண் டாக்டரின் தந்தை செய்தியாளர்களிடம்

“சி.பி.ஐ. தாக்கல் செய்த சான்றுகளின் அடிப்படையில் நல்லதொரு தீர்ப்பு அமையும் என நீதிமன்றம் நினைக்கிறது. அந்த தீர்ப்பை கோர்ட்டு வழங்கியுள்ளது.  எங்களுக்கு சி.பி.ஐ. மேற்கொண்ட விசாரணையில் நிறைய கேள்விகள் உள்ளன. நாங்கள் இழப்பீடுக்காக கோர்ட்டுக்கு போகமாட்டோம். எங்களுக்கு நீதி வேண்டும். இழப்பீடு வேண்டாம்.

கொல்கத்தா காவல்துறையினர் தவறு இழைத்துள்ளனர். சி.பி.ஐ. இன்னும் சில விசயங்களை செய்ய வேண்டும். எனது மகள் உயிரிழப்பை விட அதிக வலியை கொல்கத்தா காவல்துறையினர் ஏற்படுத்தி இருந்தனர்”

எனக் கூறியுள்ளார்.