தமிழ் சினிமாவில் சமீப காலமாக பல்வேறு சோகச் சமபவங்கள் தொடர்ந்து நடந்துக்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதல் நடிகர்கள், நடிகைகள், நடிகர்களின் உறவினர்கள் என பலரும் உயிரிழந்து வருவது அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில் பிரபல சீரியல் நடிகரான குட்டி ரமேஷ் தற்போது மரணம் அடைந்துள்ளார். சன்.டிவி, விஜய் டிவி உள்ளிட்ட சேனல்களில் வெகு காலமாக சீரியல்களில் நடித்து வந்த குட்டி ரமேஷ் மரணம் அடைந்துள்ள செய்தியை விஜய் டிவி தமது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளது. இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தேன்மொழி’ சீரியலில் நடிகை ஜாக்லினுக்கு அப்பாவாக நடித்து வந்தவர் குட்டி ரமேஷ். தேன்மொழியை தவிர மேலும் சில சீரியல்களிலும், சினிமாவிலும் நடித்துள்ளார் குட்டி ரமேஷ்.