தாய்மார்களுக்கு 1,000 ரூபாய் பிச்சை போட்டால் திமுகவுக்கு வாக்களித்து விடுவார்களா ? என்று நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000 வழங்கப்படும் என்று திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தி வருகிறது.
1 கோடியே 13 லட்சம் மகளிர் பயன்பெறும் இந்த திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன் பெண்கள் மத்தியில் திமுக-வின் செல்வாக்கு உயர்ந்துள்ளது.
தாய்மார்களுக்கு 1,000 ரூபாய் பிச்சை போட்டால் திமுகவுக்கு வாக்களிப்பார்களா?
– நடிகை குஷ்பு சர்ச்சைப் பேச்சு pic.twitter.com/7YwUiCNnM8
— Spark Media (@SparkMedia_TN) March 11, 2024
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு “தாய்மார்களுக்கு 1,000 ரூபாய் பிச்சை போட்டால் திமுகவுக்கு வாக்களித்து விடுவார்களா ?” என்று கேள்வி எழுப்பியதை அடுத்து மகளிர் உரிமை தொகை பெறும் பெண்களை இழிவுபடுத்தி உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.