குறிஞ்சிப்பாடி

குறிஞ்சிப்பாடி ஆசிரியை ரம்யாவை கொலை செய்ததாக கூறப்படும் குற்றவாளி ராஜசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

                                                                        ராஜசேகர்

குறிஞ்சிப்பாடியில் உள்ள செம்படவ வீதியில் வசிப்பவர் சுப்ரமணியன். இவருடைய மகள் ரம்யா ஒரு ஆசிரியை ஆவார். இருபத்து மூன்று வயதாகும் ரம்யா குறிஞ்சிப்பாடி ஆண்டி தெருவி உள்ள தனியார் பள்ளியில் பணி புரிந்து வருகிறார். இவர் கல்லூரியில் படிக்கும் போதிருந்தே ராஜசேகர் என்பவர் இவரை ஒருதலையாக காதலித்துள்ளார்.

கொலையான ரம்யா

ராஜசேகர் விருத்தாசலம் மாவட்டம் விருதகுரிகுப்பம் என்னும் சிற்றூரை சேர்ந்தவர் ஆவார். சுமார் 24 வயதாகும் இவரது காதலை ரம்யா ஏற்கவில்லை. ஆயினும் அவர் சில மாதங்களுக்கு முன்பு ரம்யாவின் தந்தையை சந்தித்து பெண் கேட்டுள்ளார். ஆனால் ரம்யாவின் தந்தை இவரை ஏற்கவில்லை.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலை ரம்யா வழக்கம் போல் பள்ளிப் பணிக்கு சென்றுள்ளார். அவர் தனியாக வகுப்பறையில் இருந்த போது திடீரென அங்கு வந்த ராஜசேகர் அவர் கழுத்தை அறுத்து கொன்று விட்டு தப்பி ஓடி விட்டார். ரம்யா வகுப்பறையிலேயே மரணம் அடைந்துள்ளர். காவல்துறையினர் ரம்யாவின் சடலத்தை பிரேத            பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தலைமறைவான ராஜசேகரை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் திருநாவலூர் அருகே உள்ள காட்டுப் பகுதியில் உள்ள முந்திரிக்காட்டுப் பகுதியில் ராஜசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். அவர் உடலை இன்று கண்டெடுத்த காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.