சென்னை:
குரங்கணி மலை காட்டுத் தீ விபத்து குறித்து விரவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாக விசாரணை நடத்தி வரும் ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ரா தெரிவித்து உள்ளார்.
தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப்பகுதிக்கு டிரெக்கிக் சென்றவர்கள் அங்கு பரவிய காட்டுத்தீயில் சிக்கி 11 பேர் ஸ்பாட்டிலேயே மரணத்தை தழுவினர். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்களில் பலரும் மரணம் அடைந்தனர்.
தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த நிகழ்வு குறித்து, விசாரணை செய்து அறிக்கை அளிக்க ஐஏஎஸ் அதிகாரியான அதுல்யா மிஸ்ரா நியமிக்கப்பட்டிருந்தார்.
இவர் தீ பிடித்த வனப்பகுதி மற்றும் டிரெக்கிக் அழைத்து சென்ற நிறுவனம் உள்பட பலரிடம் விசாரணை நடத்திய நிலையில், தற்போது அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அதுல்யா மிஸ்ரா, காட்டுத்தீ விபத்து குறித்து விசாரணை முடிவடைந்துவிட்டது என்றும், தற்போது அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்வேன் என்று கூறினார்.