சென்னை:

சுப்ரீம் கோர்ட்டால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட மறைந்த  ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டுவது முறையற்றது. இது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

இன்று கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் அங்க பல்வேறு  மக்கள் நலப்பணிகளை தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்,  கொளத்தூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு பணிகள்  தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும், தமிழக மாணவர்களை காப்பி அடிப்பதாக கூறி அவர்களிடம் நடைபெற்ற சோதனை  கொச்சைப்படுத்தும் விதமாக நேற்றைய நீட் தேர்வின் போது நடைபெற்றது. இது கண்டிக்கத்தக்கது.

இதுபோன்ற அநாகரிக செயல்படுகளில் ஈடுபடாதவாறு சிபிஎஸ்இ திருந்த வேண்டும் என்றும், நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், காவிரி தீர்ப்புக்கு எதிராக இன்று கர்நாடகம் தாக்கல் செய்துள்ள அறிக்கைக்கு பதில் அளித்த ஸ்டாலின், காவிரி நீர் திறப்பில் சுப்ரீம் கோர்ட் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது என்றார். மேலும், நாளை கூடும்  அனைத்துக் கட்சி கூட்டத்தில் காவிரி குறித்து விவாதிக்கப்படவுள்ளது என்றும் தெரிவித்தார்.

மறைந்த ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்ட இன்று அடிக்கல் நாட்டப்பட்டது குறித்த கேள்விக்கு,  இன்று  சுப்ரீம் கோர்ட்டால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டுவது முறையற்றது. இது ஜனநாயகத்திற்கு எதிரானது.

இவ்வாறு அவர் கூறினார்.