சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தால் கும்பகோணம் தனி மாவட்டமாக உருவாக்கப்படும் அங்கு தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி வழங்கினார்.
கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சில ஆண்டுகளாக அந்த பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி, , தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் வட்டங்களை பிரித்து, கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும், நாச்சியார்கோவில், திருப்பனந்தாள், அம்மாப்பேட்டை ஆகிய ஊர்களை பிரித்து புதிய தாலுகாக்களை உருவாக்கிட வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கைளை தமிழக அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், எடப்பாடி அதை கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் கும்பகோணத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தஞ்சை மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருகிறார். அப்போது, கும்பகோணத்தை தலைமை இடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படும், அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.