நாகர்கோவில்: பணியின்போது பயங்கரவாதிகளால் சுட்டும், வெட்டியும் கொலை செய்யப்பட்ட ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இவரும் பயங்கரவாதியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும்  விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்தஆண்டு ஜனவரி மாதம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் , குமரி மாவட்ட ஆய்வாளர் கொலை விவகாரம்.  வில்சன் கடந்த ஆண்டு (2020)  ஜனவரி மாதம் 8ஆம் தேதி களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்தபோது, அங்கு வந்த மர்ம காரை நிறுததி விசாரணை  நடத்தனார். அப்போது, அதில் இருந்த பயங்கரவாதிகள், அவரை வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்துவிட்டு தப்பினர்.
இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளும் வெளியானது. இதையடுத்து, வழக்கை விசாரித்த காவல்துறையினர்,  பயங்கரவாதி காஜா, மொய்தீன்  உள்பட 10 பேர் கைது செய்தனர். இந்தவழக்கை தேசிய புலனாய்வு கையில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வந்தது. இதில், சம்பந்தப்பட்ட பலரை தேடி வந்த நிலையில், சமீபத்தில், சென்னை விமான நிலையத்தில் வைத்து ஒருவரை மடக்கி கைது செய்தது.  அவரது பெயர் ஷகாபுதீன் என்பதும் கோவையைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. இவர் வில்சனை கொலை செய்த குற்றவாளிகளுக்கு உதவியதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால், இவரும் பயங்கரவாதிகளில் ஒருவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த வழக்கை தற்போது விசாரித்து வருகின்றனர், ஒரு ஆண்டுக்கு மேலாக இந்த வழக்கு தொடர்ந்து வரும் நிலையில் தற்பொழுது சென்னை விமான நிலையத்தில் வைத்து இந்த வழக்கில் தொடர்புடைய தீவிரவாதி ன்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியாகி உள்ள நிலையில், இவர் கைது செய்யப்பட்ட மற்ற தீவிரவாதிகளுக்கு உதவிய தீவிரவாதி எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்தஓராண்டாக தலைமறைவாக வெளிநாடுகளில் தஞ்சமடைந்திருந்த ஷகாபுதீன், சென்னை விமான நிலையம் வந்தபோது, அவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.