மைசூரு:

ரசியல்வாதிகளை சிறுமைப்படுத்தும் வகையில்   நையாண்டி செய்ய உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது யார் என்று ஊடகங்களுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி கேள்வி எழுப்பினார்.

லோக்சபா தேர்தலையொட்டி, கர்நாடகாவில் குமாரசாமி குடும்பத்துக்குள் அரசியல் அதிகாரப் போட்டி நிலவியது. முதல்வர் குமாரசாமியின் மகனும், அவரது அண்ணன் ரேவண்ணாவின் மகனும் ஒரே தொகுதி கேட்டு அடம்பிடித்தனர். இதில் குமாரசாமியின் தந்தையும், ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவருமான தேவகவுடா ரேவண்ணாவின் மகனுக்கு ஆதரவாக பேசியதை தொடர்ந்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக குமாரசாமியின் குடும்பத்திற்குள் நடைபெற்ற அரசியல் அதிகாரப்போட்டி ஊடகங்களை வாயிலாக வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த நிலையில், மைசூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் குமாரசாமி, ஊடகங்கள் மீது கடுமையாக சாடினார். எங்கள் பெயரை  தவறாக பயன்படுத்துதற்கு நீங்கள்(மீடியா) யார்? எங்களை போன்ற அரசியல்வாதிகளை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நாங்கள் வேலையில்லாமல் இப்பதாக நினைக்கிறீர்களா? என்று கடுமையாக சாடியவர்,  நாங்கள் என்ன உங்களுக்கு கார்ட்டூன் கதாபாத்திரங்கள் போல தோன்றுகிறோமா? என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து ஆவேசமாக பேசியவர், எங்களையெல் லாம் சிறுமைப்படுத்தும் நோக்கில் நகைச்சுவை யாக காட்ட உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? என்று  கேள்வி எழுப்பியவர்,  உங்களை பற்றியெல்லாம் எனக்கு கவலையோ, பயமோ இல்லை என்று ஆவேசமாகப் பேசினார்.

மேலும்,  கர்நாடக ஆட்சியில் சிலரின் யூகங்களை போல எதுவும் நடக்காது. ராகுல் நல்லாசி மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் ஆதரவுடன் மக்களாட்சி ஆட்சி தொடரும்.

இவ்வாறு அவர் பேசினார். முதல்வர் குமாரசாமியின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.