திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்யா நாட்டு கூட்டு முயற்சியால் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.  அந்த பகுதி பொதுமக்கள், அரசியல் கட்சியினரின்  பலத்த எதிர்ப்புகளையும் முறியடித்து சுமார் 12 ஆண்டுகளை கடந்து முதல் அணு உலை 2014ம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வந்தது. தற்போது அதிலிருந்து தடையில்லாமல் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது.
TN-nuclear-plant-L
இதற்கிடையில் 2வது யூனிட்டில் மின் உற்பத்தி செய்வற்கான பணிகள் நடைபெற்று வந்தது. அனைத்து பணிகளும் முடிந்து தற்போது 2வது அணு உலை நாளை முதல் மின் உற்பத்தியை தொடங்க இருக்கிறது. இதற்கான ஆயத்த பணிகள் நேற்று முதல் தொடங்கின.
ஏற்கனவே அணு உலையில் யுரேனியம் நிரப்பப்பட்டு சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. இதற்கு இந்திய அணுசக்தி துறை ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கிவிட்டது. மத்திய சுற்றுசூழல் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியமும் ஆய்வுகள் செய்து 2வது அணு உலை இயங்க அனுமதி வழங்கியது.
kudankulam-big
இதை தொடர்ந்து 2-வது அணு உலையில் அணு பிளவு தொடங்கப்பட்டு மின் உற்பத்திக்கு ஆயத்தமாகி வருகிறது. நாளை முதல் மின் உற்பத்தி தொடங்கும் என்று அணுமின் நிலைய இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார்