கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் பார்வை ஓடிடி தளங்கள் மீது திரும்பியது.

சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி மற்றவர்களுக்கும் நம்பிக்கை தந்தது.

அந்த வகையில் பிரபல ஓடிடி தளமான ஜீ5-ல் கடந்தாண்டு ‘லாக்கப்’, ‘கபெ.ரணசிங்கம்’, ‘முகிலன்’, ‘ஒரு பக்க கதை’ ஆகிய படங்கள் வெளியானது.

தற்போது இயக்குநரும், நடிகருமான கே.எஸ்.ரவிகுமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ’மதில்’ என்னும் திரைப்படம் வெளியாக இருக்கிறது. ஏப்ரல் 14 அன்று மதில் திரைப்படம் ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளது.

இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இந்த படத்தை எஸ்.எஸ்.குரூப்பின் உரிமையாளர் சிங்கா சங்கரன் தயாரித்துள்ளார். கே.எஸ்.ரவிக்குமாருடன் இணைந்து படத்தில் மைம் கோபி, ‘பிக்பாஸ்’ மதுமிதா, காத்தாடி ராமமூர்த்தி, ‘லொள்ளு சபா’ சாமிநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.