சென்னை
தமிழக துணை முதல்வரின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கிய காதலிக்க நேரமில்லை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது/
ரவிமோகன் நடிப்பில் ‘பிரதர்’ படத்தை தொடர்ந்து வெளியாம் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில், நித்யா மேனன், யோகி பாபு, லால், வினய், லட்சுமி கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமிழக துணை முதல்வர் உதயநிதியின் மனைவியும் “வணக்கம் சென்னை” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவருமான கிருத்திகா உதயநிதி இப்படத்தை இயக்க ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்
இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த14-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி இதுவரை. ரூ. 10 கோடி வரை வசூலித்தது. “காதலிக்க நேரமில்லை” படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வரும் 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.